புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

பெரிய அளவில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் டீசல் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டிஃபெண்டர் காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லேண்ட் ரோவர், 90 (3-கதவு) மற்றும் 110 (5-கதவு) என்ற இரு விதமான வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிலும் தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டீசல் என்ஜினையும் இனி வாங்கலாம்.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

ஒவ்வொரு வடிவத்திலும் எஸ்இ, எச்எஸ்இ, எக்ஸ்-டைனமிக் எச்எஸ்இ, எக்ஸ் என்ற நான்கு விதமான தேர்வுகளில் வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன. புதிய டீசல் என்ஜின் உடன் டிஃபெண்டர் 90-இன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.94.36 லட்சத்தில் இருந்து ரூ.1.08 கோடி வரையிலும், 110-இன் விலைகள் ரூ.97.03 லட்சத்தில் இருந்து ரூ.1.08 கோடி வரையிலும் உள்ளன.

Land Rover Defender Price
90 SE ₹94.36 Lakh
90 HSE ₹98.37 Lakh
90 X-Dynamic HSE ₹101.57 Lakh
90 X ₹108.16 Lakh
110 SE ₹97.03 Lakh
110 HSE ₹101.04 Lakh
110 X-Dynamic HSE ₹104.24 Lakh
110 X ₹108.19 Lakh
புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 4000 ஆர்பிஎம்-ல் 298 பிஎச்பி மற்றும் 1500- 2500 ஆர்பிஎம்-ல் 650 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கும். இதன் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

இந்த டீசல் என்ஜின் உடன் டிஃபெண்டர் 90 மாடலில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளிலும், 110 மாடலில் 7 வினாடிகளிலும் எட்டிவிடலாம். அதேநேரம் இந்த என்ஜினின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 191கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

புதிய டீசல் என்ஜின் உடன் வழக்கமான பெட்ரோல் என்ஜின் தேர்விலும் டிஃபெண்டர் தொடர்ந்து விற்பனை செய்யப்படவுள்ளது. ஆனால் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் டீசல் வேரியண்ட்களை காட்டிலும் பல லட்சங்கள் குறைவானதாக உள்ளன.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

இருப்பினும் இவ்வாறு விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதற்கு ஏற்ப காரின் தோற்றத்தில் மாற்றங்களும் எதுவும் கொண்டுவரப்படவில்லை. லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் வழக்கமான தோற்றம் தான் அதன் புதிய டீசல் வேரியண்ட்களிலும் தொடரப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்நுட்ப வசதிகளிலும் எந்தவொரு அப்கிரேடும் இல்லை.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

சுற்றிலும் வழங்கப்படும் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், டெயில்லைட்கள் உள்ளிட்டவற்றை எல்இடி தரத்தில் பெறும் டிஃபெண்டரில் 12.3 இன்ச்சில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் சிறப்பம்சங்களாக பொருத்தப்படுகின்றன.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

இவற்றுடன் டிஃபெண்டரில் வழங்கப்படும் பிராண்டின் அனைத்து சாலைக்களுக்கான சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஆறு காற்றுப்பைகள், சறுக்கலை தவிர்க்கும் சிஸ்டம், காற்று சஸ்பென்ஷன், அகலமான சென்சார்கள் மற்றும் ஓட்டுனரை கண்காணிக்கும் சிஸ்டம் போன்ற அனைத்து வசதிகளும் அதன் புதிய டீசல் வேரியண்ட்களிலும் கொடுக்கப்படவுள்ளன.

புதிய டீசல் என்ஜினில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.94.36 லட்சம்

இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் பலம் புதிய டீசல் வேரியண்ட்களின் மூலம் மேலும் அதிகரித்துள்ளது. லேண்ட் ரோவர் டிஃபெண்டருக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி 350டி மற்றும் ஜீப் வ்ராங்க்லர் கார்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Land Rover Defender Diesel Silently Launched, Priced From Rs. 94.36 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X