வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 பாண்ட் எடிசன் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டிஃபெண்டர் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

பிரபலமான ஹாலிவுட், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' (No Time To Dir) திரைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இதனை நினைவுக்கூறும் விதமாகவே லேண்ட் ரோவர் ஸ்பெஷல் வாகனம் பிரிவு பிரத்யேகமாக புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வி8 பாண்ட் எடிசனை உருவாக்கியுள்ளது.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

இந்த செப்டம்பர் மாத இறுதியில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ஸ்பெஷல் டிஃபெண்டர் கார், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி கார்களுக்கே உண்டான சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிஃபெண்டர் வி8 பாண்ட் எடிசனில் அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

12 இன்ச்சில் உள்ள இதன் பளபளப்பான கருப்பு நிற அலாய் சக்கரங்களில் செனான் நீல நிறத்தில் ப்ரேக் காலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரம் 'டிஃபெண்டர் 007' என்ற இந்த ஸ்பெஷல் எடிசனிற்கான முத்திரையையும் அலாய் சக்கரங்களில் பார்க்க முடிகிறது.

வெளிப்பக்கத்தை தொடர்ந்து இந்த பிரத்யேகமான அம்சங்கள் காரின் உட்புறத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்ளே நுழைவதற்கு முன்பே, ஒளியூட்டப்பட்ட 'டிஃபெண்டர் 007' லோகோ கொண்ட படிக்கட்டு நிச்சயம் எவர் ஒருவரையும் வசீகரித்துவிடும். அத்துடன் வி8 பாண்ட் எடிசனில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

இதன்படி, சிறப்பாக உருவாக்கப்பட்ட தொடுத்திரை ஸ்டார்ட்-அப் அனிமேஷனை இந்த ஸ்பெஷல் டிஃபெண்டர் வாகனத்தின் உள்ளுணர்வு பிவி புரோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. இவற்றுடன், காரின் உள்ளே ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக பின்பக்கத்தை காட்டும் கண்ணாடியில் பொருத்தப்படும் விளக்கில் '007' என நிழல் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஃபெண்டர் வி8 மாடலின் அடிப்படையில் இந்த ஸ்பெஷல் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளதால், வழக்கமான 5.0 லிட்டர், சூப்பர்சார்ஜ்டு என்ஜின் தான் பாண்ட் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 518 பிஎச்பி மற்றும் 625 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

இந்த என்ஜின் உதவியுடன் டிஃபெண்டர் வி8 110 மாடலில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டிவிட முடிகிறது. அதேபோல் டிஃபெண்டர் வி8 காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 240கிமீ வேகத்தில் இயங்க முடியும். தற்போதைய லேண்ட் ரோவர் டிஃபெண்டரில் சஸ்பென்ஷன் & டிரான்ஸ்மிஷன் சற்று ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

இதன்படி பிரத்யேகமான சுருள் & டேம்பர் மதிப்பு மற்றும் புதிய எலக்ட்ரானிக் ஆக்டிவ் ரியர் டிஃபென்ரென்ஷியலை பெற்றுள்ளதால் அவ்வளவு பெரிய வாகனமாக இருப்பினும் டிஃபெண்டர் வி8 காரில் ஹேண்ட்லிங் அற்புதமாக கிடைக்கிறது. சரி மீண்டும் ஸ்பெஷல், பாண்ட் எடிசனுக்கு வருவோம்.

இந்த ஸ்பெஷல் டிஃபெண்டர் வாகனத்தை தயாரிப்பு நிறுவனம் உலகளவில் வெறும் 300 யூனிட்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யவுள்ளது. இதனால் இந்த லக்சரி காரை வாங்குவதற்கு காசு இருந்தாலும், உலகளவிலான வாடிக்கையாளர்களை முந்திக்கொண்டு சொந்தமாக்குவது என்பது சற்று சிரமமான காரியம் தான்.

வாங்குறது ரொம்ப கஷ்டம்!! மிகவும் அரிதான வாகனமாக கொண்டுவரப்படும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பாண்ட் எடிசன்!

மேலும் இந்த 300 மாதிரிகளும் யுகே-வில் உள்ள லேண்ட் ரோவர் ஸ்பெஷல் வாகன பிரிவு வடிவமைப்பாளர்களால் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வழங்கப்படுமாம். ஜேம்ஸ் பாண்டின் 'நோ டைம் டு டை' படத்தில் லேண்ட் ரோவர் வாகனங்கள் தான் பெரும்பான்மையாக காட்டப்பட்டு இருந்தன என்பது படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாகனங்கள் மட்டுமின்றி, இரு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் வாகனங்களும், ரேஞ்ச் ரோவர் கிளாசிக் மற்றும் லேண்ட் ரோவர் சீரிஸ் 3 வாகனங்களும் கூட இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இந்த படத்தை 25 வருடங்கள் கழித்து மீண்டும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
NEW LAND ROVER DEFENDER V8 BOND EDITION INSPIRED BY NO TIME TO DIE.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X