Just In
- 26 min ago
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- 1 hr ago
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- 3 hrs ago
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- 4 hrs ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
Don't Miss!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- News
"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
- Movies
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன சொல்றீங்க இந்த கார்ல இப்படி ஒரு வசதியா... லீக்கானது புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் கார் பற்றிய ஆச்சர்ய தகவல்!
புதுப்பிக்கப்பட்டு வரும் ஹெக்டர் காரில் அட்டகாசமான தொழில்நுட்ப வசதி இடம்பெற இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஹெக்டர் எஸ்யூவி காரை புதுப்பித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதனை மிக சமீபத்திலேயே நிறுவனம் உறுதி செய்தது. இந்நிலையில், விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் காரில் அட்டகாசமான புதிய தொழில்நுட்ப வசதி ஒன்று இடம்பெற இருப்பதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குரல் கட்டளை வசதியையே புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் எஸ்யூவி பெற்றிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிங்கிலிஷ் (ஹிந்தி+இங்கிலிஷ்) குரல் கட்டளைக்கு ஏற்ப சில முக்கிய அம்சங்களைக் கட்டுப்படுத்தும் வசதியையே ஹெக்டர் பெற்றிருக்கின்றது. இதனையே தறபோது லீக்காகியிருக்கும் புகைப்படங்களும் உறுதிப்படுத்துகின்றன.

தங்கிலிஷ் (தமிழ் + இங்கிலிஷ்) குரல் கட்டளை வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்கிற தகவல் வெளியாகிவில்லை. இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, 'எஃப்எம் கரோ', 'சன்ரூஃப் பந்த் கர் டோ' மற்றும் 'டெம்ப்ரேச்சர் காம் கர் டோ' என கூறினால் அந்த கருவிகளை தானாகவே அது கட்டுப்படுத்தும்.

இத்தகைய சிறப்பு வசதிகளையே புதுப்பிக்கப்பட்ட விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கும் ஹெக்டர் எஸ்யூவி கார் பெறிவிருக்கின்றது. இக்காரை ஜனவரி 7ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எம்ஜி செய்துவிட்டதாககக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் காரின் குரல் கட்டளைப் பற்றிய தகவல்கள் வெளியாகி, அதன் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. இந்த சிறப்பு தொழில்நுட்ப வசதியை மட்டுமின்றி கூடுதலாக சில புதிய அணிகலன் சேர்ப்புகளையும் புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் பெற இருக்கின்றது.

அந்தவகையில், புத்தம் புது ஸ்டைலிலான முகப்பு பகுதி, க்ரில், அலாய் வீல் ஆகியவற்றை ஹெக்டர் பெற இருக்கின்றது. இத்துடன், பின் பக்க தோற்றத்திற்கு கண்களைக் கவரக்கூடி புதிய அட்டகாசமான ஸ்டைல் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கூடிய இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், லெதர் இருக்கைகள் உள்ளிட்ட பிரீமியம் வசதிகளும் ஹெக்டரில் இடம்பெற இருக்கின்றன.

எஞ்ஜின் பொருத்தவரை எந்த மாற்றத்தையும் ஹெக்டர் பெறப்போவதில்லை. ஆகையால், பழை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே ஹெக்டர் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலையிலும் கணிசமான உயர்வு இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் எம்ஜி இதுவரை வெளியிடவில்லை. விரைவில் விலை மற்றும் பிற சிறப்பு வசதிகள் பற்றிய தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது வெளியாகியிருக்கும் குரல் கட்டளை வசதி இந்தியர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், பழைய மாடல் எம்ஜி ஹெக்டரைப் போலவே இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனும் நல்ல டிமாண்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.