எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா பொலிரோ நியோ பல தரப்பட்ட வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால் எதிர்பார்ப்பதை போலவே இந்த புதிய வாகனத்தின் விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் வெற்றியை ருசிக்கும் என தெரிகிறது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இருப்பினும் எந்தெந்த வகையில் இந்த மஹிந்திரா கார் சிறந்தது என்பதை சொல்ல வேண்டியது எங்களது கடமை அல்லவா. முதலில், வாகனத்தின் பெயரில் உள்ள ‘பொலிரோ' என்ற வார்த்தையே வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

ஏனெனில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக காம்பெக்ட் எஸ்யூவி காராக விற்பனையில் இருக்கும் பொலிரோ, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மஹிந்திரா உருவெடுத்துள்ளதற்கு காரணங்களுள் முக்கியமானது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இரண்டாவது, சேசிஸ். புதிய பொலிரோ நியோவிலும் புதிய தலைமுறை தார் மற்றும் ஸ்கார்பியோ வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை சேசிஸ் அதன் வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பொலிரோ நியோவின் உட்புற கேபினை இத்தாலிய தானியங்கி வாகன வடிவமைப்பாளர் பினின்ஃபரினா வடிவமைத்துள்ளார்.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இதனால் வெளிப்புற தோற்றம் கிட்டத்தட்ட பொலிரோவை போன்று இருந்தாலும், உட்புறம் ப்ரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. இத்தகைய கேபினில் அதிநவீன 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஓட்டுனருக்கு தகவல்களை வழங்ங்கும் அமைப்பு உள்பட மிக அதிநவீன குரல் குறுந்தகவல் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இவற்றுடன் உயரத்தை சரிச்செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பவர் ஜன்னல் கண்ணாடிகள், மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் இறக்கை கண்ணாடிகள் போன்றவற்றை பெற்றுள்ள பொலிரோ நியோவில் மஹிந்திரா நிறுவனம் தொழிற்நுட்ப விஷயங்களில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

ஏனெனில் பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், கார்னரிங் ப்ரேக் கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் (ISOFIX), ஆட்டோமேட்டிக் கதவு பூட்டு மற்றும் வளைவான ஃபாலோ மீ ஹெட்லேம்ப்களை புதிய பொலிரோ நியோ பெற்றுவந்துள்ளது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இருப்பினும் பொலிரோ நியோவிலும் சில குறைகள் உள்ளன. இதில் முக்கியமானது என்று பார்த்தால், டிரான்ஸ்மிஷன் தேர்வு. இந்த புதிய மஹிந்திரா வாகனத்தில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படவில்லை, 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே தற்போதைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

ஒருவேளை எதிர்காலத்தில் வழங்கப்படலாம். ஏனென்றால் ஆட்டோமேட்டிக் தேர்வில் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் கவனிக்கத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உட்புறத்தில் மூன்றாவது இருக்கை வரிசை (ஜம்ப் சீட்கள் எனப்படுகின்றன) கொஞ்சம் ஓவராகவே குதிப்பது போன்று உள்ளன.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இது நிச்சயம் வாகனத்தின் மோதல் சோதனை முடிவுகளில் எதிரொலிக்கும். பொலிரோ நியோ என்4, என்8 மற்றும் என்10 என்ற 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் என்10 என்பது தான் விலை அதிகமான டாப் வேரியண்ட்டாகும்.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

விரைவில் இவற்றுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய என்10 (O) வேரியண்ட்டினால் என்10 வேரியண்டில் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பினும், தற்போதைக்கு பொலிரோ நியோவை டாப் என்10 வேரியண்ட்டில் வாங்குவது தான் சிறந்தது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

வெவ்வேறு பாதைக்களுக்கான தொழிற்நுட்பத்துடன் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் புதிய என்10 (O) வேரியண்ட் மட்டுமின்றி, புதிய பொலிரோ நியோவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிறத்தேர்வுகளுடன் புதியதாக ராயல் கோல்டு என்ற நிறத்தேர்வையும் இணைக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

எந்தெந்த வகையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ சிறந்தது? ‘குடும்பத்திற்கான கார்’ என்று சொல்லலாமா?

இதனால் பொலிரோ நியோவை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இந்த புதிய அறிமுகங்களின் வருகை வரை காத்திருப்பது நல்லது. அல்லது குறைந்தப்பட்சம் புதிய என்10 (O) வேரியண்ட்டை பற்றியும், ராயல் கோல்டு பெயிண்ட் தேர்வை பற்றியும் அருகில் உள்ள டீலர்களிடம் கலந்துரையாடிய பின்பு வாகனத்தை முன்பதிவு செய்ய பாருங்கள்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Learn more about newly launched Mahindra Bolero Neo. It's safe to buy?
Story first published: Thursday, July 15, 2021, 2:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X