ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யுரியஸ் படத்தில் பால் வால்கர் உபயோகப்படுத்திய டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் ரசிகர்களுக்கு இது உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகும். அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரெட்-ஜாக்சன் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஆரஞ்சு நிற சுப்ரா 1994ல் தயாரிக்கப்பட்டதாகும்.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

இந்த பிரபல ஸ்போர்ட்ஸ் காரை 2001 மற்றும் 2003ஆம் ஆண்டிகளில் வெளியான ஃபாஸ்ட் & ஃப்யுரியஸ் படங்களில் பிரைன் ஒ கானெர் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்க நடிகர் பால் வால்கர் பயன்படுத்தி இருந்தார். லம்போர்கினி டியாப்லோ காரின் கேண்டி ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் பக்கவாட்டு பகுதிகளில் கிராஃபிக்ஸ் உள்ளன.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

காரின் தோற்றத்தை மெருக்கேற்று வகையில் காரை சுற்றிலும் போமெக்ஸ் பாடி கிட், டிஆர்டி-ஸ்டைலில் முன்பக்க பொனெட், ஏபிஆர் அலுமினிய பின்பக்க இறக்கை மற்றும் 19 இன்ச்சில் டாஸ் மோட்டார் ஸ்போர்ட் ரேசிங் ஹர்ட் எம்5 சக்கரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

இதன் கருப்பு நிற கேபினில் ஸ்டேரிங் சக்கரம், நீல நிற இருக்கைகள் மற்றும் ஹெட் யூனிட் உள்ளிட்டவை அனைத்தும் படத்தில் பார்த்தப்படி அப்படியே உள்ளன. அடியில் பொருத்தப்படும் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது டொயோட்டா நிறுவனம் தொழிற்சாலையில் பொருத்தியவை தான் இப்போது வரையில் உள்ளன.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

1994 சுப்ராவில் டொயோட்டா நிறுவனம் 2ஜே.இசட்-ஜிடிஇ டர்போசார்ஜ்டு 3.0 லிட்டர் இன்லைன்-6 சிலிண்டர் என்ஜினை பொருத்தியது. இது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனின் உதவியுடன் என்ஜினின் ஆற்றல் பின் சக்கரங்களுக்கு செல்கிறது.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

ஹாலிவுட் படங்களுக்கு ஏற்ப வாகனங்களை மாடிஃபை செய்வதில் கில்லாடியான எட்டி பால் மூலமாக வடிவமைக்கப்பட்ட கார் என்ற சிறப்பை இந்த டொயோட்டா சுப்ரா கார் கொண்டது. எட்டி பால் இந்த ஸ்போர்ட்ஸ் காரை கலிபோர்னியாவின் எல் செகுண்டோவில் உள்ள ஷார்க் என்ற இடத்தில் உருவாக்கினார்.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

அதன்பின் படத்தில் மீண்டும் அதன் பாத்திரத்திற்காக பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த டொயோட்டா சுப்ரா கார் அதற்கு பின்னரே லம்போர்கினி டியாப்லோவின் கேண்டி ஆரஞ்சு நிறத்திற்கு, புகழ்பெற்ற டிராய் லீ வடிவமைத்த ‘நியூக்ளியர் கிளாடியேட்டர்' கிராஃபிக்ஸ் உடன் மாற்றப்பட்டது.

ஃபாஸ்ட் & ஃப்யுரியஸின் டொயோட்டா சுப்ரா கார் விற்பனைக்கு வந்தது!! போட்டி போடும் அமெரிக்கர்கள்!

இந்த 1994 டொயோட்டா சுப்ரா காருக்கான ஏலம் வருகிற ஜூன் 17ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. ஆரம்ப ஏல தொகையாக எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Paul Walker's 'Fast & Furious' Toyota Supra is up for grabs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X