2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் ரூ.56.65 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டு சந்தைக்கு வந்திருக்கும் இந்த புதிய லெக்ஸஸ் காரை பற்றிய கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் சந்தையில் அதன் அளவில் சிறிய செடான் கார்கள் வரிசையை அப்டேட் செய்துள்ளது. இதன்படி ரூ.56.65 லட்சத்தில் இஎஸ்300எச் காரின் 2021ஆம் ஆண்டிற்கான வெர்சன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

இது இதன் முந்தைய வெர்சனை காட்டிலும் வெறும் ரூ.10,000 மட்டுமே அதிகமாகும். 2021ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக காரின் வெளிப்பக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான தோற்ற மாற்றங்களும், இதற்கு ஏற்ப உட்புற கேபினில் கூடுதல் வசதிகளும் லெக்ஸஸ் இஎஸ் செடான் காரில் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

நேர்த்தி மற்றும் லக்சரி என்கிற இரு விதமான ட்ரிம் நிலைகளில் இஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தில் மிகவும் குறைவான அப்டேட்களே வழங்கப்பட்டுள்ளதால், காரின் பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. லெக்ஸஸ் இஎஸ்-இன் முன்பக்க சுழல் வடிவ க்ரில் ஆனது இம்முறை மெஷ் பேட்டர்னில் சற்று திருத்தப்பட்டுள்ளது.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

ஹெட்லேம்ப்களுக்கான குழிகள் முன்பை காட்டிலும் சற்று கூடுதல் கூர்மையானதாக மாற்றப்பட்டுள்ளன. அதேநேரம் அலாய் சக்கரங்களின் டிசைனும் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய லெக்ஸஸ் இஎஸ் காரை சோனிக் இரிடியம் மற்றும் சோனிக் க்ரோம் ஷேட்களில் பெறலாம்.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

இந்த புதிய காரின் உட்புற கேபினின் தோற்றத்தில் கை வைக்கப்படவில்லை. ஆனால் இம்முறை புதிய பழுப்பு நிற மெட்டீரியல்களால் இஎஸ் செடானின் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இஎஸ்300எச் காரின் கேபினுள் புதியதாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக முன்பே கூறியிருந்தோம்.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

இதில் மடக்கும் வசதி கொண்ட பின் இருக்கைகள், ப்ரேக் பெடல் பகுதியில் கூட கூடுதல் இடவசதி, கிக் சென்சார் உடன் கால்களை நீட்டினால் திறக்கும் வசதி கொண்ட பின் கதவு, 360-கோண கேமிரா, ஆப்பிள் கார்ப்ளே & ஆன்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17-ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பொனெட்டிற்குள் 2.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினானது 16kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டின் மூலமாக அதிகப்பட்சமாக 215 பிஎச்பி மற்றும் 221 என்எம் டார்க் திறனை பெறலாம். இஎஸ்300, ஒரு முன் சக்கரங்களின் மூலம் இயங்கும் லக்சரி காராகும்.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

டிரான்ஸ்மிஷனுக்கு இந்த காரில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் லெக்ஸஸின் இந்த செடான் மாடலுக்கு டொயோட்டாவின் காம்ரி செடான் கார் மட்டும் தான் போட்டியாக உள்ளது. ஆனால் டொயோட்டா காம்ரியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41.20 லட்சத்தில் இருந்தே துவங்குகின்றன.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

உலகளவில் கடைசியாக லெக்ஸஸ் நிறுவனம் 2022 என்எக்ஸ் காரை கடந்த ஜூன் மாதத்தில் வெளியீடு செய்திருந்தது. லெக்ஸஸின் எஸ்யூவி மாடலான என்.எக்ஸ் புதிய தலைமுறை அப்கிரேட்களை அதன் ப்ளாட்ஃபாரம், என்ஜின், வெளிப்புற தோற்றம் என அனைத்திலும் பெற்றுள்ளது. வெளிப்பக்கத்தில் மிக முக்கியமான அப்கிரேடாக நீளமான வுட் ஆனது காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

ஆனால் உண்மையில் முன்பக்கத்தை காட்டிலும் 2022 என்.எக்ஸ் காரின் பின்பக்கம் தான் அதிக மாற்றங்களை ஏற்றுள்ளது. இந்த வகையில் காரின் பின்பக்க L-வடிவ டெயில்லேம்ப்களின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெயில்கேட்டின் அகலத்திற்கு எல்இடி லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

புதிய என்.எக்ஸ், லெக்ஸஸின் முதல் ப்ளக்-இன் ஹைப்ரீட்-எலக்ட்ரிக் வாகனமாக, 2.4 லிட்டர் டர்போசார்ஜ்டு & 2.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது. அனைத்து-சக்கர ட்ரைவ் மற்றும் முன் சக்கர ட்ரைவ் தேர்வுகளுடன் வெளியீடு செய்யப்பட்ட 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் காரை இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம்.

2021 லெக்ஸஸ் இஎஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! விலை ரூ.56.65 லட்சம்

2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் எஸ்யூவி, டாடா ஹெரியர், டொயோட்டா ஆர்ஏவி4 வாகனங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட டிஎன்ஜிஏ கட்டமைப்பின் அதே ஜிஏ-கே வெர்சனை பயன்படுத்தி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இஎஸ் செடான் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
Lexus ES facelift launched in India at Rs 56.65 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X