விசேஷ பெயிண்ட்டில் அசத்தும் புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன்... இந்தியாவில் அறிமுகம்!

லெக்சஸ் எல்எஸ்500எச் சொகுசு காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிகவும் தனித்துவமான இந்த கார் குறித்த முழு விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு பிரிவான லெக்சஸ் கார்களுக்கு இந்தியாவில் தனி வாடிக்கையாளர் வட்டம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மிக அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய முயற்சிகளில் லெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

அந்த வகையில், தனது எல்எஸ் 500எச் சொகுசு காரில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது லெக்சஸ் நிறுவனம்.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

லெக்சஸ் எல்எஸ் 500எச் நிஷிஜின் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கு ரூ.2.22 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் புதிய வண்ணத் தேர்வில் விற்பனைக்கு வந்துள்ளது. நிஷிஜின் ஸ்பெஷல் எடிசன் மாடலில் Gin-ei Luster என்ற புதிய வண்ணத் தேர்வை லெக்சஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த சில்வர் வண்ணத் தேர்வானது விசேஷ தொழில்நுட்பத்தில் கண்ணாடியை போன்ற அம்சத்துடன் கொடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய மாடலின் உட்புறத்தில் கதவில், இரவில் நிலவு ஒளி கடல் நீரில் பட்டு நீண்ட வழித்தடம் அலை அலையாய் தெரிவது போன்ற பிம்பத்தை காட்டும் வகையிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் அதிக ரம்மியமாக இருக்கிறது.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

இதுதவிர்த்து, எல்எஸ் 500எச் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி கொடுக்கப்படுகிறது.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

அதேபோன்று, ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள், சென்ட்ரல் கன்ட்ரோல் சுவிட்சுகளும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பம்பர்கள் வடிவமைப்பு புதுப்பொலிவுடன் அதிக வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

 லெக்சஸ் எல்எஸ்500எச் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லெக்சஸ் எல்எஸ் 500எச் சொகுசு கார் இந்தியாவில் ரூ.1.91 கோடி ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதன் நிஷிஜின் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.2.22 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இது மிகவும் தனித்துவமான தேர்வாக அமையும் என்று கூறலாம்.

Most Read Articles

மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Lexus has introduced all new special variant of its luxury sedan ls 500h.
Story first published: Monday, January 18, 2021, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X