ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

உலகளவில் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த கார் பிராண்ட்களுள் ஒன்று ஃபோக்ஸ்வேகன் (Volkswagen). ஜெர்மனை தாயகமாக கொண்ட ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

வேகன், பெட்லீ உள்ளிட்ட ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஒரு சமயத்தில் பல நாட்டு சாலைகளை ஆட்சி செய்து வந்துள்ளன. மற்ற கார்களை காட்டிலும் ஃபோக்ஸ்வேகன் கார்களின் மீது அதன் ரசிகர்கள் பைத்தியம் பிடித்தாற் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது, இந்த ஜெர்மன் கார் பிராண்டில். தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

One-Touch ஜன்னல் கண்ணாடி செயல்பாடு

காருக்கு வெளியே இருப்பவரிடம் பேசுவதற்கு, ஒரு டச் மூலமாக கீழிறக்கி, மேலேறும் ஜன்னல் கண்ணாடி வசதி ஆனது ஒரு காலத்தில் ஓட்டுனர் பக்கம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் அதனை அனைத்து ஜன்னல் கண்ணாடிகளுக்கும் முதலாவதாக வழங்கியது ஃபோக்ஸ்வேகன் தான்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

புதிய வசதிகளை காரில் கொண்டுவந்தால் விலையினை பெரிய அளவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகரிக்காது என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வகையில் இந்த ஜன்னல் கண்ணாடி வசதியினை பழைய போலோ காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்டில் கூட காண முடியும்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

சிறந்த என்ஜின் திருத்தம்

இந்த ஒரு விஷயத்திற்காக தான் எந்தவொரு மெக்கானிக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை வசைப்பாடுவதில்லை. அந்த அளவிற்கு, சிறிய அளவிலான என்ஜினை கொண்ட ஃபோக்ஸ்வேகன் கார்களில் கூட ஆக்ஸலேரேட்டரை அழுத்தும் போது ஒரு அசட்டு சிரிப்பு வருவதை தவிர்க்க முடிவதில்லை. அதேபோல் மைலேஜ் விஷயத்திலும் ஃபோக்ஸ்வேகன் கண்ணியமாக நடந்து கொள்ளக்கூடிய நிறுவனமாகும்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

பிரச்சனையற்ற கியர் மாற்றம்

தற்போதைய மாடர்ன் தென்கொரிய கார்களில் எல்லாம் இரட்டை-க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வை பரவலாக காண முடிகிறது. ஆனால் இத்தகைய டிரான்ஸ்மிஷனை ஆரம்பத்தில் கொண்டுவந்ததும் ஃபோக்ஸ்வேகன் தான். இதனை அவர்கள் எப்போதும் மார்த்தட்டி கொண்டு சொன்னது இல்லை.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

ஃபோக்ஸ்வேகன் கார்களில் கியர்பாக்ஸில் பிரச்சனை வருவது அரிதான ஒன்றே. இரட்டை-க்ளட்ச் போன்ற ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்தின் மேனுவல் தேர்வில் கூட கியர் மாற்றம் மிகவும் நேர்த்தியாகவும், மிகவும் சவுகரியமானதாகவும் இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

திடமான கட்டமைப்பு

கார்களின் கட்டமைப்பு விஷயத்தில் எப்போதும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமரசமானது கிடையாது. ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் காரின் உருவாக்கத்திலும், பயணிகள் பாதுகாப்பு விஷயத்திலும் மிக கடுமையாக இருக்கக்கூடியவை என்பது உலகம் முழுக்க பேசக்கூடிய ஒன்று.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

மலிவான போலோ காராக இருக்கட்டும் அல்லது சற்று விலைமிக்க டிகுவான் காராக இருக்கட்டும் ஃபோக்ஸ்வேகன் காரின் உள்ளே அமர்ந்து பயணம் செய்கிறீர்கள் என்றால், அந்த நான்கு சுவற்றிற்குள் பாதுகாப்பை உணரலாம்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

அதிவேகத்தில் செல்வதற்கு சிறந்தவை

ஐரோப்பிய கார் பிராண்ட்டாக இருப்பதினால் அதிவேக கார்களை உருவாக்குவதில் ஃபோக்ஸ்வேகன் மிக சிறந்ததாக விளங்குகிறது. ஒவ்வொரு ஃபோக்ஸ்வேகன் காரிலும் டாப்-ஸ்பீடு அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

வேகத்திற்கு ஏற்ப காரின் உடல் சுழலும்போது ஃபோக்ஸ்வேகன் கார்களில் அசவுகரியம் என்பது ஏற்படுவது இல்லை. ஃபோக்ஸ்வேகன் பிராண்டின் கார்களில் பொதுவாகவே வேகம் அதிகரிக்க, அதிகரிக்க ஸ்டேரிங் சக்கரத்தின் எடை கூடும் என்பார்கள். இதனால் ஓட்டுனருக்கு கூடுதல் நம்பிக்கை பிறக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

நேர்த்தியான தோற்றம்

ஃபோக்ஸ்வேகன் கார்கள் மிக நேர்த்தியானவை. ஃபோக்ஸ்வேகன் கார்களின் தோற்றத்தை உலகளவில் உள்ள பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும், நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை என்று தான் நினைக்கிறேன்.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

பழமையான ஆட்டோமொபைல் பிராண்டான ஃபோக்ஸ்வேகன் அந்த காலத்தில் இருந்து கார்களின் வடிவமைப்பில் கொண்டுள்ள ஃபார்முலாவை தற்போது வரையில் பயன்படுத்தி வருகிறது. ஃபோக்ஸ்வேகன் பின்பற்றும் முட்டாள்தனமான அணுகுமுறையே அதை ஈர்க்க செய்கிறது.

ஃபோக்ஸ்வேகன் பிராண்டின்மீது ஒரு சிலர் பைத்தியம் போல் இருப்பது ஏன்? அப்படி என்னதான் உள்ளது இதன் கார்களில்!!

சில ஃபோக்ஸ்வேகன் கார்கள் இன்னமும் தொடுத்திரை அப்டேட் ஆகாமல், பொத்தான்கள் உடன் தான் உள்ளன. ஆனால் இது உண்மையில் பெரியதாக குறையாக தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக ஃபோக்ஸ்வேகன் நடைமுறைக்குரிய, கம்பீரமான கேபின் உடன் கார்களை உருவாக்குகிறது.

Most Read Articles
English summary
6 Things You Will Only Find In Volkswagen Cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X