விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

கொரோனா 2வது அலையின் எதிரொலியாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மற்ற பட்ஜெட் கார்களை போல் சொகுசு கார்களின் விற்பனையையும் பாதித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

கடந்த மே மாதத்தில் 482 சொகுசு கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முந்தைய 2021 ஏப்ரல் மாதத்தில் இதனை காட்டிலும் ஆயிரம் யூனிட்கள் அதிகமாக, 1,455 சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

சொகுசு கார்கள் விற்பனையில் எப்போதுமே மெர்சிடிஸ் நிறுவனத்திற்கும், பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கும் இடையே தான் போட்டி இருக்கும். இதில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் 198 கார்களை விற்பனை செய்துள்ளது. மொத்த விற்பனையில் மெர்சிடிஸின் பங்கே 41.08% ஆகும்.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

இருப்பினும் இந்த விற்பனை எண்ணிக்கையை 2021 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் 62.21 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 524 மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. நடப்பு ஜூன் மாதத்தை மேபக் ஜி.எல்.எஸ் 600 எஸ்யூவி காருடன் இந்த நிறுவனம் துவங்கியுள்ளது.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன், பெண்ட்லீ பெண்டயகா மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோகிராஃபி கார்களுக்கு போட்டியாக விளங்கும் இந்த மெர்சிடிஸ் மேபக் காரின் விலை ரூ.2.43 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rank Brand May-21 Apr-21 Growth (%)
1 Mercedes-Benz 198 524 -62.21
2 BMW 152 557 -72.71
3 Audi 47 116 -59.48
4 Jaguar Land Rover 39 144 -72.92
5 Volvo 36 86 -58.14
6 Porsche 6 23 -73.91
7 Lamborghini 2 5 -60.00
8 Ferrari 2 0 -
9 Rolls-Royce 0 0 -
10 Bentley 0 0 -

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த மே மாதத்தில் 152 கார்களை விற்றுள்ளது.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

ஆனால் 2021 ஏப்ரல் மாதத்தில் விற்பனையில் மெர்சிடிஸை முந்தி முதலிடத்தை பிடித்து இருந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், அந்த மாதத்தில் 557 யூனிட் கார்களை விற்பனை செய்திருந்தது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் எக்ஸ்7 மாடலின் புதிய டார்க் ஷடோவ் எடிசன் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

வெறும் 500 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் விலை ரூ.2.02 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு (சிபியூ முறையில்) விற்பனை செய்யப்பட்டுவரும் எக்ஸ்7 டார்க் ஷடோவ் எடிசனில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

ஃபோக்ஸ்வேகன் ஆடி நிறுவனம் இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆடி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் 47 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஏப்ரலில் 116 ஆடி கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் 2021 ஏப்ரல் மாத விற்பனையில் ஆடியை முந்திக்கொண்டு மூன்றாவது இடத்தில் இருந்தது.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

ஆனால் கடந்த மாத விற்பனையில் வெறும் 39 கார்களை மட்டுமே விற்பனை செய்து இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்திற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் சரிந்துள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் கிட்டத்தட்ட 100 வால்வோ கார்கள் விற்பனை செய்யப்படும்.

விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ்!! கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது!

ஆனால் கடந்த மாதத்தில் 36 வால்வோ கார்களே விற்கப்பட்டுள்ளன. போர்ஷே கார்கள் 6 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்து 2 லம்போர்கினி கார்களும், 2 ஃபெராரி கார்களும் கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Luxury Car Sales India May 2021 – Mercedes, BMW, Audi, JLR, Volvo, Porsche.
Story first published: Saturday, June 12, 2021, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X