ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் 1,001 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 916 மட்டுமே. இதன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதும் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம்தான். அது பிஎம்டபிள்யூ ஆகும்.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 765 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 631 ஆக இருந்தது. இந்த பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 174 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 163 ஆக இருந்தது. இந்த பட்டியலில் ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 153 ஆக இருந்தது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

ஆனால் அது நடப்பாண்டு அக்டோபரில் 120 ஆக சரிந்துள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஆடி நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் இந்திய சந்தையில் சிபியூ வழியில் 105 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 7ஆக இருந்தது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 25ஆக சற்றே உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

லம்போர்கினி நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் வெறும் ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 4ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லீ நிறுவனம் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. பென்ட்லீ நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை போல், நடப்பாண்டு அக்டோபர் மாதமும் வெறும் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்தை இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிடித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 காரை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட விற்பனையாகவில்லை. அந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் சொகுசு கார்களின் பட்டியலில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். இங்கிலாந்தை சேர்ந்த சில நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றின் விற்பனை எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை தற்போது கார் உற்பத்தி மற்றும் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் இதற்கு காரணம். நவீன கார்களின் மூளை என வர்ணிக்கப்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதால் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிவதில்லை.

ஜெர்மனியின் ஆதிக்கம்... இந்தியாவில் அதிக சொகுசு கார்களை விற்பனை செய்யும் கம்பெனி எதுன்னு தெரியுமா?

இதன் காரணமாக கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் டெலிவரி பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதுடன், கார்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த பிரச்னை தற்போது காணப்படுகிறது. இதனால் முன்னணி நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Luxury car sales report october 2021
Story first published: Thursday, November 18, 2021, 23:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X