Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் தொடரும் பென்ஸ் & பிஎம்டபிள்யூ கார்களின் ராஜ்ஜியம்!! ஒரே மாதத்தில் 7 கார்களை விற்றுள்ள ரோல்ஸ்ராய்ஸ்
கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட லக்சரி கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை இனி செய்தியில் பார்ப்போம்.

சொகுசு கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 2020 ஜனவரியை காட்டிலும் கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 1,480 ஆர்டிஒ அலுவலங்களில் 1,273-ல் கடந்த மாதத்தில் 2,194 லக்சரி கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் 3,629 லக்சரி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மொத்த சொகுசு கார்களின் விற்பனையில் வழக்கம்போல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் 859 பென்ஸ் கார்கள் இந்தியாவில் ஆர்டிஒ அலுவலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்தாலும், 2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 28.54 சதவீதம் குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 1,202 பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜனவரியில் மொத்தம் விற்பனையான லக்சரி கார்களில் மெர்சிடிஸ் கார்களின் எண்ணிக்கை மட்டுமே 39.15 சதவீதமாகும்.
Rank | Model | Jan-21 | Feb-20 | Growth (%) |
1 | Mercedes-Benz | 859 | 1,202 | -28.5 |
2 | BMW | 703 | 1,345 | -47.7 |
3 | Audi | 254 | 421 | -39.7 |
4 | Jaguar Land Rover | 211 | 409 | -48.4 |
5 | Volvo | 109 | 194 | -43.8 |
6 | Porsche | 46 | 48 | -4.2 |
7 | Rolls-Royce | 7 | 2 | 250.0 |
8 | Ferrari | 3 | 5 | -40.0 |
9 | Bentley | 1 | 0 | - |
10 | Lamborghini | 1 | 3 | -66.7 |

பென்ஸ் கார்களுக்கு அடுத்து அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட சொகுசு கார்கள் என்று பார்த்தால், அவை பிஎம்டபிள்யூ கார்கள் தான். கடந்த மாதத்தில் 703 கார்களை இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் விற்பனை 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் சுமார் 47.73 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ என்ற இரு நிறுவனங்கள் மட்டுமே மொத்த லக்சரி கார் விற்பனையில் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.

இவை இரண்டிற்கும் அடுத்து பெரிய இடைவெளியுடன், கிட்டத்தட்ட 450 கார்கள் வித்தியாசத்துடன் ஃபோக்ஸ்வேகன் ஆடி நிறுவனம் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆடி கார்களின் எண்ணிக்கை 254 ஆகும்.

2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் ஆடி கார்களின் விற்பனையும் கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் வால்வோ நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 211 மற்றும் 109 ஆகும்.

மேற்கூறிய சொகுசு கார் நிறுவனங்களை போன்று இவற்றின் விற்பனையும் 2020 ஜனவரியை காட்டிலும் முறையே 48.41 மற்றும் 43.81 சதவீதம் குறைந்துள்ளது. போர்ஷே கார்களின் விற்பனை பெரிய அளவில் மாற்றமில்லை.

ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் கடந்த மாதத்தில் விற்பனையில் ஓரளவுக்கு முன்னேறியுள்ள நிறுவனம் என்று பார்த்தால், அது ரோல்ஸ் ராய்ஸ் தான். 2020 ஜனவரியில் வெறும் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் 7 கார்களை விற்றுள்ளது.

இவற்றுடன் 2021 ஜனவரியில் 3 ஃபெராரி கார்கள், 1 லம்போர்கினி மற்றும் 1 பெண்ட்லீ கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். 2020 ஜனவரியில் ஒரு பெண்ட்லீ கார் கூட விற்பனையாகவில்லை. 2020 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் சொகுசு கார்களின் விற்பனை 40 சதவீதம் குறைந்திருந்தாலும், 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 13.68 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.