பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

பிஎம்டபிள்யூ எம்5 கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் எம்5 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுதான் தற்போதைய எம்5 காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

பிஎம்டபிள்யூ எம்5 ஃபேஸ்லிஃப்ட் கார் உலகளவில் 2019 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புனேவில் வந்திறங்கியதை பார்த்திருந்தோம்.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

தற்போது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள எம்5 காரின் அப்கிரேட் வெர்சனாக வெளிவரும் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் முன்பக்கத்தில் இரட்டை L-வடிவ பகல்நேரத்திலும் ஒளிரும் விளக்குகளுடன் ரீடிசைனில் எல்இடி ஹெட்லைட்களையும் பின்பக்கத்தில் புகை எஃபக்ட் உடன் புதிய எல்இடி டெயில்லைட்களையும் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

இவற்றுடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் க்ரில், வித்தியாசமான தோற்றத்தில் பம்பர்கள், பூட் ஸ்பாய்லர் மற்றும் டிஃப்யூஸர் போன்றவற்றையும் ஏற்றுள்ளதை புனே வந்திறங்கிய எம்5 ஃபேஸ்லிஃப்ட் காரில் பார்க்க முடிந்தது.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

அந்த காரில் மேற்கூரை கார்பனால் தயாரிக்கப்பட்டும், அலாய் சக்கரங்கள் 20 இன்ச்சிலும் வழங்கப்பட்டு இருந்தன. இதன் உட்புறத்தில் 12.3 இன்ச்சில் தொடுத்திரை ஹெட் யூனிட்டை கொண்ட ஐட்ரைவ் 7 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கிய அம்சமாக வழங்கப்பட்டிருக்கும்.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 12.3 இன்ச்சில் கொடுக்கப்படவுள்ளது. எம்5 ஃபேஸ்லிஃப்ட் கார் வழக்கமான அதே 4.4 லிட்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜினை பெற்று வரவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 592 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிஎம்டபிள்யூ எம்5 கார் ஸ்டாக்கில் இல்லையா? காரின் பெயர் இணைய பக்கத்தில் இருந்து நீக்கம்!!

அதுவே எம்5 காம்பெடிஷனில் 609 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இரு வேரியண்ட்டிலும் அனைத்து சக்கர ட்ரைவ் சிஸ்டம் நிலையாக வழங்கப்படுகிறது. எம்5 ஃபேஸ்லிஃப்ட் காரில் கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் புதிய ட்ராக் மோட் என வெவ்வேறு விதமான ட்ரைவிங் மோட்கள் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles

English summary
BMW M5 removed from website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X