மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மும்பை நகரத்தில் சாரட் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைத்தொடர்ந்து பார்க்கலாம்.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தில் பழமையின் சின்னமான விக்டோரியா வாகனங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இம்முறை குதிரைகள் இல்லாத மின் வாகனங்களாக அவை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. அதாவது, குதிரைகளுக்கு பதிலாக மின்சார மோட்டார்கள் இவ்வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

சாரட் வண்டிகளின் இயக்கத்திற்கு பெயர்போன நகரமாக மும்பை இருந்தது குறிப்பிடத்தகுந்தது. கடந்த 2015ம் ஆண்டில் இந்த இயக்கத்திற்கு தடைவிதித்து பாம்பே உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனால், முன்பு மும்பை நகர சாலைகளை ஆக்கிரமித்து வந்த சாரட் வண்டிகளின் இயக்கம் அறவே இல்லாத சூழல் உருவாகியது.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

இதனால் சாரட் வண்டிகளை மட்டுமே நம்பி பிழைப்பை ஓட்டி வந்த ஏழை மக்களின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படைந்தது. இந்த நிலையைத் தொடர்ந்து, குதிரைகள் அல்லாத, மின்சாரத்தால் இயங்கும் சாரட் வண்டிகளின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு மும்பை நகர போக்குவரத்துத் துறைக்கு தனியார் நிறுவனம் ஒன்று கோரிக்கை விடுத்தது.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

இதனை பரிசீலித்து வந்த மஹாராஷ்டிரா மாநில அரசு மிக சமீபத்தில் மின் மோட்டார் அடிப்படையிலான சாரட் வண்டிகளின் இயக்கத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர் குடியிருக்கும் வர்ஷா பகுதியில் குதிரைகள் இல்லா மின்மோட்டார்கள் கொண்ட சாரட் வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

இந்த சேவையை கடந்த ஞாயிற்று கிழமை அன்றே முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார். மின்சார சாரட் வண்டிகளுக்கான சாவி அதன் ஓட்டுநர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் அணில் பரப் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

ஆரம்பகட்டமாக 12 சாரட் வண்டிகளுக்கு மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. இவை, மும்பை நகரத்தின் முக்கிய பகுதிகளான கேட்வே இந்தியா, ஃப்ளோரா ஃபவுண்டெயின், காலா கோடா, மரினே டிரைவ், கிர்காவும் சவுபதி மற்றும் நாரிமன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட இருக்கின்றன. அதேசமயம், இந்த வாகனங்கள் உபோ ரைடெஸ் எனும் தனியார் நிறுவனத்தின் வாயிலாகவே இயக்கப்பட இருக்கின்றன.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

இதனால், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குதிரை சாரட் வாகன உரிமையாளர்கள் என்ன மாதிரியான பலனை அடைய இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. புதிய சாரட் வாகனங்கள் தூய்மை (பசுமை) இயக்கம் கொண்ட வாகனங்கள் ஆகும். இவை துளியளவும் மாசுபாட்டை செய்யாது.

மும்பை நகர வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது விக்டோரியா சாரட் வாகனங்கள்!!

ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளே இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த எடை 650 கிலோவாக இருக்கின்றது. சாரட் வண்டிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மும்பை நகர வாசிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Maharashtra CM Uddhav Thackeray Launched Electric Victoria Carriages In Mumbai. Read In Tamil.
Story first published: Tuesday, March 16, 2021, 14:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X