இரு பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!

மஹிந்திரா நிறுவனம் அதன் இரு புகழ்வாய்ந்த மாடல்களை இந்திய வாகன சந்தையில் இருந்து நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது எந்தெந்த மாடல்கள் மற்றும் ஏன் திடீர் முடிவு என்பதுகுறி்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

நாட்டை மையமாகக் கொண்டு மஹிந்திரா அதன் இரு புகழ்வாய்ந்த கார் மாடல்களை இந்திய சந்தையில் வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நிறுவனம் இரு பிரபல கார் மாடல்களை விற்பனையில் இருந்து விளக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

அண்மையில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எம்டி அணிஷ் ஷா, "தான் பதவி ஏற்ற பின்பு முக்கிய தயாரிப்புகளான எஸ்யூவிக்கள் மீது மட்டுமே நிறுவனத்தின் கவனம் இருக்கும்" என தெரிவித்தார். தொடர்ந்து, குறைந்த விற்பனையைப் பெறும் வாகனங்களை விற்பனையில் இருந்து விளக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

நல்ல வரவேற்பைப் பெறும் தயாரிப்புகள் மீது அதிக கவனத்தைச் செலுத்தும் விதமாக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ எம்பிவி மற்றும் கேயூவி100 என்எக்ஸ்டி மைக்ரோ எஸ்யூவி ஆகிய கார் மாடல்கள் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

இதுகுறித்த தகவலை ஆட்டோகார் ஆங்கில செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவல் மஹிந்திரா கார் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பட்ஜெட் வாகனமான கேயூவி100 என்எக்ஸ்டி கார் வெளியேற்றப்பட இருப்பது பட்ஜெட் வாகன விரும்பிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

மராஸ்ஸோ மற்றும் கேயூவி100 என்எக்ஸ்டி மாடல்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத சூழ்நிலையேக் காணப்படுகின்றது. ஆகையால், இவற்றின் விற்பனை மந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே இரு மாடல்களையும் நிறுவனம் வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

அதேசமயம், மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் 2021ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 37,286 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இதேபோன்று, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா 19,300 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. இவற்றுடன் ஒப்பிடுகையில் மராஸ்ஸோவின் விற்பனை 711 அலகுகளாக மட்டுமே இருக்கின்றது.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

இத்தகைய குறைந்தபட்ச விற்பனையின் காரணமாகவே மராஸ்ஸோ விரைவில் விற்பனையில் இருந்து வெளியற்றப்பட இருக்கின்றது. இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனில் இந்தியாவின் எந்த மூலையிலும் இக்காரை பெறுவது கடினமான ஒன்றாக மாறிவிடும்.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

குறைந்த விற்பனையைப் பெறும் கார் மாடல்களை வெளியேற்ற ஆயத்தமாகி வரும் மஹிந்திரா, மறுபக்கம் புதிய மாடல்களைக் களமிறக்குவதிலும் தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில், மிக விரைவில் அதன் இரு புதுமுக மின்சார கார்களைக் களமிறக்க இருப்பதாக மிக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

2 பிரபலமான கார் மாடல்களை சந்தையை விட்டே வெளியேற்ற மஹிந்திரா திட்டம்... இந்த கார்களுக்கா இப்படி ஒரு நிலைமை!!

இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி300 ஆகிய இரு மின்சார கார்களையே நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகின்றது. அடுத்த ஆண்டின் மத்திக்குள் இவ்விரு கார்களும் அறிமுகமாகிவிடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra And Mahindra To Discontinue Marazzo & KUV100 To Focus On SUVs. Read In Tamil.
Story first published: Wednesday, May 12, 2021, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X