Just In
- 6 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 7 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 8 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மெகா இலவச சர்வீஸ் முகாம்... வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிப்பு!!
மஹிந்திரா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மெகா இலவச சர்வீஸ் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம், இலவச நாடு தழுவிய மெகா சர்வீஸ் கேம்பை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தனது தனி நபர் பயண வாகனங்களான அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சேவையை வழங்க அது திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் பொலிரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500, மராஸ்ஸோ, அல்டுராஸ் ஜி4, எக்ஸ்யூவி300, டியூவி300, கேயூவி100, தார், ஜைலோ, நுவோஸ்போர்ட், குவாண்டோ, வெரிட்டோ, வெரிட்டோ வைப், லோகன் மற்றும் ரெக்ஸ்டான் ஆகிய மாடல் வாகனங்களை பாசஞ்ஜர் வாகன பிரிவில் விற்பனைச் செய்து வருகின்றது.

இந்த மாடல்களுக்காகவே பிரத்யேக 'நாடு தழுவிய இலவச மெகா சர்வீஸ் கேம்ப்' தொடங்கப்பட்டிருக்கின்றது. வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் தொடங்கப்பட்டிருக்கும் இச்சேவை பிப்ரவரி 8ம் தொடங்கி, வருகின்ற 18ம் தேதி வரையில் பயன்பாட்டில் இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள 600 மஹிந்திரா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒர்க்ஷாப்களின் வாயிலாகவே இந்த சிறப்பு சர்வீஸ் செய்யப்பட இருக்கின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மஹிந்திரா நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்-பிளஸ் எனும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சர்வீஸ் கேம்பில் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட புள்ளிகள் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து பாகங்கள், சர்வீஸ் மற்றும் பிற சிறப்பு சேவைகளுக்கு பெரும் தொகை தள்ளுபிட வழங்கப்பட இருக்கின்றது.

ஆமாங்க, மஹிந்திரா நிறுவனம் இந்த சர்வீஸ் கேம்பை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு 75 செக்-அப் பாயிண்டுகளை வழங்க இருக்கின்றது. தொடர்ந்து, உதிரி பாகங்களின் விலையில் 5 சதவீத தள்ளுபடியும், பணியாளர் கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும், மேக்ஸிகேர் சேவைக்கு 25 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், மேக்ஸிகேர் என்பது காரை கிருமி நாசினிகளைக் கொண்டு செய்வதாகும். இதன்மூலம் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொல்லை இல்லா பயண அனுபவத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சிறப்பு சர்வீஸ் கேம்பிற்கு ஆன்லைன், குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதற்கான கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகவே செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இத்துடன், இருக்கும் இடத்திற்கே வந்து காரை பிக்-அப் செய்து, சர்வீஸுக்கு பின்னர் மீண்டும் டெலிவரி செய்யவும் இந்த சேவையில் சிறப்பு வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான முன்பதிவை ஹமேஷா (Hamesha) எனும் செல்போன் செயலி மூலம் புக் செய்து கொள்ள முடியும்.

மஹிந்திரா நிறுவனம் ஹமேஷா எனும் பெயரில் ஓர் டுவிட்டர் கணக்கையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த கணக்கின் வாயிலாக பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய அறிவிப்புகள் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இதே பெயரில் பயன்பாட்டில் இருக்கும் ஆப்-பின் வாயிலாக சிறப்பு சர்வீஸ் முகாமிற்காக புக்கிங்கை நிறுவனம் ஏற்று வருகின்றது.

மேலும், இந்த சிறப்பு சர்வீஸ் கேம்பில் பங்குகொள்ளும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இத்தகைய வாகனங்களுக்கு இந்த சர்வீஸ் முகாம் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.