ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

மஹிந்திரா பொலிரோ நியோ கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

இந்த ஜூலை மாத துவக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் தற்போதைய டியூவி300 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக கொண்டுவரப்பட உள்ள பொலிரோ நியோவின் முதல் தொகுப்பு டீசர் படங்களை வெளியிட்டது.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

இதனால் இந்த ஜூலை மாத இறுதியில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பொலிரோ நியோ தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

அதன் ஸ்பை படங்கள் தான் தற்போது ஃபேஸ்புக் க்ரூப் ஒன்றின் மூலமாக டீலர்ஷிப் வளாகத்திற்குள் இருந்து வெளியாகியுள்ளன. இந்த படங்களில் முற்றிலும் புதிய நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் பொலிரோ நியோ காரை காணலாம்.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

காரின் பின்பக்க கதவில் ‘என்10' என்ற முத்திரையை பார்க்க முடிகிறது. இதன் மூலம் பொலிரோ நியோ புதுமையான வேரியண்ட்களின் பெயர்களுடன் வெளிவரவுள்ளது தெரிய வருகிறது. புதிய ஸ்பாய்லர், கருப்பு நிற கதவு கைப்பிடிகள் மற்றும் பொலிரோ நியோவின் முத்திரை என காரின் பின்பக்கம் சில மாற்றங்களை ஏற்றுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

முன்பக்கத்தில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் உடன் திருத்தியமைக்கப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப்கள், அகலமான ஏர் டேம், ஃபாக் விளக்குகள், மறுவேலை செய்யப்பட்ட முன் பம்பர் மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் என ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக புத்துணர்ச்சியான தோற்றத்தை இந்த 2021 மஹிந்திரா வாகனம் பெற்றுவரவுள்ளதையும் ஏற்கனவே பார்த்திருந்தோம்.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், இரண்டாவது இருக்கை வரிசைக்கும் கை தலையணை & தலை தலையணை மற்றும் கருப்பு நிற ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றுடன் புதிய பொலிரோ நியோவின் உட்புறம் பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த மஹிந்திரா பொலிரோ நியோ!! டெலிவிரி எப்போது துவங்க போகுதோ?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பிஎஸ்6 தரத்தில் 1.5 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் பொலிரோ நியோவில் பொருத்தப்பட உள்ளது. பிஎஸ்4 வெர்சனில் இந்த என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Neo arrives at dealers ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X