ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

மஹிந்திரா பொலிரோ நியோ இந்திய சந்தையில் ரூ.8.48 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மஹிந்திரா வாகனத்தை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

தொடர் சோதனை ஓட்டங்கள், டீசர்கள் என அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக மஹிந்திரா நிறுவனம் இறுதியாக பொலிரோ நியோ வாகனத்தை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய பொலிரோ நியோ வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

தற்போதைக்கு ஆரம்ப விலை மட்டுமே அறிமுக விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி பொலிரோ நியோவின் வேரியண்ட்களின் விலைகள் குறித்த விபரங்களை வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளியிட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

முந்தைய மஹிந்திரா டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக கொண்டுவரப்பட்டுள்ள பொலிரோ நியோ வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் ஏகப்பட்ட அப்டேட்களை பெற்றுள்ளது. பொலிரோ மஹிந்திராவின் சிறந்த விற்பனை மாடலாக விளங்கினாலும், இந்நிறுவனத்தின் டியூவி300 சப்-4 மீட்டர் வாகனம் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கவரவில்லை.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

இதனாலேயே டியூவி300-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொலிரோ நியோ என்கிற பெயரில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதால், மிக முக்கிய மாற்றங்கள் அனைத்தும் வாகனத்தின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் முன்பை காட்டிலும் நேர்த்தியானவைகளாக, பக்கவாட்டில் எல்இடி டிஆர்எல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் புதிய ஃபாக் விளக்குகளுடன் முன் பம்பரின் தோற்றமும் மறுவேலை செய்யப்பட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

மேலும் மஹிந்திராவின் புதிய 6-ஸ்லாட் க்ரோம் க்ரில் டிசைனிற்கும் பொலிரோ நியோ அப்டேட் செய்யப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் C பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழக்கப்பட, D பில்லர்கள் வாகனத்தின் நிறத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

இவற்றுடன் பொனெட், சக்கர வளைவுகள் மற்றும் தடிமனான பிளாஸ்டிக் க்ளாடிங் உள்ளிட்டவற்றை பெயரை நியாயப்படுத்துவதற்காக மஹிந்திரா பொலிரோவின் வடிவத்தில் இந்த புதிய எஸ்யூவி வாகனம் பெற்று வந்துள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

அலாய் சக்கரங்கள் 5-ஸ்போக் டிசைனில் உள்ளன. டியூவி300 மாடலில் வழங்கப்பட்ட மேற்கூரை தண்டவாளங்கள் புதிய பொலிரோ நியோவில் இல்லை. பின்பக்கத்தில் இந்த எஸ்யூவி வாகனம் புதிய X-வடிவிலான ஸ்பேர் சக்கர மூடியை கொண்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

பழுப்பு நிற துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ள பொலிரோ நியோவின் உட்புறத்தில் புதிய டயல்களுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்க புதிய திரை, சாய்த்து சரிச்செய்து கொள்ளக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

கைகளுக்கான தலையணை இரண்டாவது இருக்கை வரிசையில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ப்ளூடூத் வசதியுடன் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் ஈக்கோ மோட் உடன் ஏசி, உயரத்தை சரிச்செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்ற வழக்கமான வசதிகளையும் இந்த புதிய வாகனம் பெற்றுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், இபிடி மற்றும் சிபிசி, இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் தேர்வாக ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

மற்றப்படி வழக்கமான 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டீசல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. டியூவி300 மாடலில் வழங்கப்பட்டிருந்த போதே பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுவிட்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 100 எச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.8.48 லட்சம்

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டியூவி300-ஐ போல் மஹிந்திரா பொலிரோ நியோவிலும் எரிபொருளை மிச்சப்படுத்தும் நோக்கமாக என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra launches the new ‘Bolero Neo’ at a starting price of ₹ 8.48 Lakh. The Bolero Neo is built on the 3rd generation chassis shared with Scorpio & Thar and it comes with the proven Mahindra mHawk engine. Modern unmissable presence, exterior design with Premium Italian design interiors. Available across Mahindra dealerships pan India, from today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X