மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

மஹிந்திரா பொலிரோ நியோ என்ற பெயரில் வெளிவரவுள்ள டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

எக்ஸ்யூவி500 மற்றும் பொலிரோ மாடல்களின் புதிய தலைமுறைகள் உள்பட மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஏகப்பட்ட புதிய வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

இந்த வாகனங்களில் தற்சமயம் விற்பனையில் உள்ள டியூவி300-இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் ஒன்றாகும். ஆனால் இந்த கார் பொலிரோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பொலிரோ நியோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

இதற்கிடையில் அவ்வப்போது சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போது மீண்டும் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தபட்டுள்ளது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

இது தொடர்பான ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான டியூவி300 உடன் ஒப்பிடுகையில் அதன் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சில மாற்றங்களை பெற்றுவரும் என்பது உறுதி.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

குறிப்பாக முன்பக்கத்தில் ரீடிசைனில் க்ரில், புதிய பம்பர் மற்றும் நேர்த்தியான வடிவில் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். மற்றப்படி பெட்டகம் வடிவிலான காரின் பரிமாண அமைப்பு, சதுர வடிவிலான சக்கர வளைவுகள் மற்றும் ஒரு பக்கமாக திறக்கும் வகையிலான பின்பக்க கதவு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

அதேபோல் டியூவி300 காரின் லேடார் ஃப்ரேம் சேசிஸிலும் மஹிந்திரா நிறுவனம் கை வைக்காது. டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரிலும் பக்கவாட்டு & பின்பக்க படிக்கட்டு, மேற்கூரை தண்டவாளங்கள், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் டெயில்கேட்டில் கூடுதல் சக்கரம் போன்றவை வழங்கப்படவுள்ளன.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட சோதனை மாதிரி இரும்பினாலான சக்கரங்களை கொண்டுள்ளது. அதேநேரம் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களும் எல்இடி தரத்தில் இல்லை.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

பின்பக்க கதவில் டியூவி300 முத்திரையை தான் தற்போதைக்கு கொண்டுள்ள இந்த சோதனை காரில் 7 இருக்கை அமைப்பை பார்க்க முடிகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியை கொண்ட 7.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்கிறோம்.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

இதுமட்டுமில்லாமல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுனர் இருக்கை, சாவியில்லா நுழைவு, பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புறத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை, இபிடியுடன் ஏபிஎஸ், சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் வசதி மற்றும் இரட்டை முன்பக்க காற்றுப்பைகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கலாம்.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய புதிய மஹிந்திரா பொலிரோ நியோ!! பொது சாலையில் சோதனை ஓட்டம்

ஆனால் பொலிரோ நியோவில் டியூவி300 காரில் வழக்கமாக வழங்கப்படும் அதே 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 சிலிண்டர் டீசல் என்ஜின் தான் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Neo (TUV300 Facelift) Spied Again During Testing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X