விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கடந்த அக்டோபர் மாதம் மஹிந்திரா பொலிரோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

நடப்பாண்டு அக்டோபர் மாதம் மஹிந்திரா நிறுவனத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் சந்தை பங்கில் 2.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 20,034 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த மாதம் அதிக கார்களை விற்பனை செய்த கார்களின் பட்டியலில் மஹிந்திரா 4வது இடத்தை பிடித்துள்ளது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

முதல் மூன்று இடங்களில் முறையே மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார் என்ற பெருமையை பொலிரோ பெற்றுள்ளது. பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய கார்கள் கூட்டாக 6,375 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

மஹிந்திரா பொலிரோ காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இது 1.5 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

மஹிந்திரா பொலிரோ காரில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை 8.71 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.70 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

அவை B4, B6 மற்றும் B6 (O) ஆகியவை ஆகும். இந்திய சந்தையில் மஹிந்திரா பொலிரோ காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. எனினும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிட்டு வருகிறது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இதற்கிடையே மஹிந்திரா பொலிரோ நியோ கார், பொலிரோ உடன் பெயரை பகிர்ந்து கொள்கிறது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வந்த மஹிந்திரா டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஆகும். மஹிந்திரா பொலிரோ நியோ காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்த காரின் ஆரம்ப விலை 8.77 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா பொலிரோ காரை போலவே, மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த எக்ஸ்யூவி700 காருக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளுடனும், அதிநவீன வசதிகளுடனும், கவர்ச்சிகரமான டிசைனுடனும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்பதிவு தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே எக்ஸ்யூவி700 காருக்கு, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளதால், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், அதனை டெலிவரி பெறுவதற்கு சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

போதாக்குறைக்கு தற்போது செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை வேறு நிலவி வருகிறது. இதுவும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் காத்திருப்பு காலத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. வரும் காலங்களில் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் மஹிந்திரா பொலிரோ... அக்டோபர் மாதம் இத்தனை கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

அனேகமாக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் உள்ளிட்ட பல்வேறு புதிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra bolero october 2021 sales report
Story first published: Friday, November 26, 2021, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X