மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது மஹிந்திரா நிறுவனம். இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

கார் விற்பனையை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தக்க வைப்பதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி தள்ளுபடி சலுகைகளை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ.3.06 லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா கேயூவி100NXT

மஹிந்திரா கேயூவி100NXT மினி எஸ்யூவி மாடலுக்கு ரூ.38,055 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்குவோருக்கு ரூ.20,000 கூடுதல் மதிப்பு வழங்கப்படும். கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாக ரூ.4,000 வரையில் பெற முடியும். மேலும், டீலரை பொறுத்து ரூ.62,055 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா எக்ஸ்யூவி300

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி எழுந்துள்ள நிலையில், தனது எக்ஸ்யூவி300 காருக்கு ரூ.44,500 வரை சேமிப்புச் சலுகைகளை மஹிந்திரா வழங்குகிறது. நேரடி தள்ளுபடியாக ரூ.10,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாக ரூ.25,000 வரையிலும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.5,000 வரையிலும், கூடுதல் சேமிப்புச் சலுகையாக ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.39,502 வரையிலான சேமிப்புச் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. நேரடி தள்ளுபடியாக ரூ.10,000 வரையிலும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.4,500 கார்ப்பரேட் போனாகவும் வழங்கப்படுகிறது. கூடுதல் சேமிப்புச் சலுகைகள் மூலமாக ரூ.10,000 வரை சேமிக்க முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா எக்ஸ்யூவி500

புதிய தலைமுறை மாடல் விரைவில் எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.80,800 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.36,800 வரையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.9,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாகவும், ரூ.15,000 கூடுதல் சேமிப்புச் சலுகைகளாகவும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு ரூ.36,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.6,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆஃபராகவும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.24,050 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ரூ.3,500 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. தவிரவும், ரூ.6,550 வரையில் கூடுதல் சேமிப்புச் சலுகையும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு ரூ.3.06 லட்சம் வரை சேமிப்புச் சலுகை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.2.2 லட்சம் வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் போனஸாக ரூ.16,000 வரையிலும், இதர சேமிப்புச் சலுகைகள் மூலமாக ரூ.20,000 வரையிலும் சேமிக்க முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு ரூ.3.06 லட்சம் வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!

ஆஃபர் விபரம்

மஹிந்திரா ஆன்லைன் தளத்தில் மேற்கண்ட தள்ளுபடி விபரங்கள் கிடைக்கின்றன. டீலருக்கு டீலர் சேமிப்புச் சலுகைகளில் மாறுபாடு இருக்கலாம். எனவே, டீலருக்கு செல்லும்போது இந்த விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு புக்கிங் செய்வது சிறந்தது. வரும் 28ந் தேதி வரை புதிய மஹிந்திரா கார்களை புக்கிங் செய்வோருக்கு மேற்கண்ட சிறப்புத் தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும் என்று மஹிந்திரா எஸ்யூவி விற்பனை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra is offering a bunch of discounts, offers for its entire range of products (excluding the Thar) in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X