Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபாவளிக்கு பிறகு விற்பனையில் எழுச்சி பெறும் மஹிந்திரா!! என்ன கமர்ஷியல் வாகனங்கள்தான் சரியாக விற்பனையாகவில்லை
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதன் ஒட்டுமொத்த 2020 டிசம்பர் மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் 35,187 வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவிலும் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பனை செய்துள்ளது.

ஆனால் அதேநேரம் 2019 டிசம்பர் மாதத்தில் 39,230 வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. பயன்பாட்டு வாகனங்களை பொறுத்தவரையில் இந்த பிரிவில் மொத்தம் 16,050 வாகனங்களை இந்த இந்திய முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே 2019 டிசம்பரில் இதனை 5 சதவீதம் குறைவாக 15,225 வாகனங்களையே இந்த நிறுவனம் விற்றிருந்தது. பயணிகள் வாகன பிரிவில் 16,182 வாகனங்கள் கடந்த 2020 டிசம்பரில் மஹிந்திரா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும். கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 2,210 வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் இங்குள்ள தொழிற்சாலைகளில் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், மொத்த விற்பனையில் 21,173 மஹிந்திரா வாகனங்கள் 2020 டிசம்பரில் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 17,213 தான்.

கடந்த டிசம்பர் மாதத்தில் மஹிந்திராவின் 22,417 டிராக்டர்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 1,244 டிராக்டர்களும் அடங்கும். ஆனால் 2019 டிசம்பரில் 17,991 டிராக்டர்களைதான் மொத்தமாக மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த மாத விற்பனையில் கமர்ஷியல் வாகன பிரிவுதான் சற்று சறுக்கலை மஹிந்திராவுக்கு வழங்கியுள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் 16,795 மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019 டிசம்பரில் 21,390 வாகனங்கள் விற்கப்பட்டு இருந்தன.

இந்த விற்பனை நிலவரம் குறித்து மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் முதன்மை நிர்வாக அதிகாரி விஜய் நக்ரா கருத்து தெரிவிக்கையில், "டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டு வாகனங்களில் 5% வளர்ச்சியைக் கண்டுள்ளோம்.

தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய சூழலுடன் தொடர்புடைய தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சவால்களால் எங்கள் ஒட்டுமொத்த விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பண்டிகை காலத்திற்குப் பிறகும், புதிய ஆண்டிற்குள் வரும்போதும் தேவை தொடர்ந்து வலுவாக உள்ளது" என கூறினார்.