5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...!!

5-கதவு தார் எஸ்யூவி மாடல் இந்தியாவில் 2023ல் இருந்து 2026க்குள் அறிமுகமாகலாம் என்று மஹிந்திரா நிறுவனம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

2021ஆம் நிதியாண்டின் நான்காம் கால்பகுதியில் நடைபெற்ற விற்பனை குறித்த அறிக்கையை இணையத்தில் வெளியிடும்போது மஹிந்திரா நிறுவனம் நீண்ட தோற்றம் கொண்ட தார் வாகனத்தின் இந்த அறிமுகம் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

மேலும் இந்த அறிவிப்புகளுடன், 2026ஆம் ஆண்டிற்குள் ஒன்பது தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த 9 தயாரிப்பு வாகனங்களில் 5-கதவு தார் வாகனமும் ஒன்றாகும்.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

இதுமட்டுமின்றி புதிய தலைமுறை பொலிரோவும் இந்த 9 அறிமுகங்களில் அடங்குகிறது. ஆனால் இவற்றின் அறிமுக தேதி மேற்கூறப்பட்ட வருடங்களில் எந்த மாதத்தில் இருக்கும் என்ற விபரங்களை மஹிந்திரா தற்போதைக்கு வெளியிடவில்லை.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

மஹிந்திராவின் புதிய அறிமுகங்களில் புதிய இவி ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களும் இருக்கலாம். எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரின் புதிய தலைமுறையை உருவாக்கும் பணியிலும் மஹிந்திரா ஈடுப்பட உள்ளது.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

தற்போதைய எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை கார் எக்ஸ்யூவி700 என்கிற பெயரில் கொண்டுவரப்படுகிறது. இதுதான் மஹிந்திராவின் அடுத்த அறிமுகமாக இருக்கும். ஏனெனில் இதன் அறிமுகம் நடப்பு 2021ஆம் ஆண்டிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

புதிய தலைமுறை ஸ்கார்பியோ அடுத்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவற்றுடன் டபிள்யூ 620 மற்றும் வி201 என்கிற குறியீட்டு பெயரால் தற்போதைக்கு அழைக்கப்பட்டு வருகின்ற கார்களும் மஹிந்திரா பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளன.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

இந்தியாவில் 3-கதவு தாரின் புதிய தலைமுறை மாடல் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே 5-கதவு தார் நீளத்தில் அதிகமாக கொண்டுவரப்படுவதால் உட்புற கேபினும் நன்கு விசாலமானதாக இருக்கும் என்பது உறுதி.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

கேபினில் கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசை சேர்க்கப்படும். ஆனால் வாகனத்தின் உயரத்தில் மற்றும் வீல்பேஸ் நீளத்தில் மாற்றம் இருக்காது. மூன்றாவது இருக்கை வரிசையினால் வாகனத்தின் பின்பகுதியின் வடிவம் சற்று மாற்றப்படலாம்.

5-கதவு தார் வாகனத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது மஹிந்திரா!! 2026க்குள் 9 தயாரிப்புகள் வெளிவரவுள்ளதாம்...

மேலும் தற்போதைய 3-கதவு தாரை காட்டிலும் 5-கதவு தாரில் தொழிற்நுட்ப வசதிகள் ஏராளமானவை வழங்கப்படலாம். ஆனால் இயந்திர பாகங்களில் இரண்டிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இருக்காது. இதனால் அறிமுகமாகும் சமயத்தில் 3-கதவு தார் கொண்டிருக்கும் என்ஜின் தேர்வுகள் தான் 5-கதவு தாருக்கும் வழங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Thar 5-Door SUV Confirmed; To Be Launched Between 2023 And 2026.
Story first published: Saturday, May 29, 2021, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X