கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

நாட்டின் முதல் பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெண் வீராங்கனையின் கோரிக்கையை ஏற்று, தனது புதுமுக அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரில் ஓர் சிறப்பு வசதியை மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்க்லாம், வாங்க.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா ((Mahindra), இந்தியாவின் முதல் பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெண் வீராங்கனைக்காக புதுமுக அறிமுகமான எக்ஸ்யூவி700 (XUV700) காரில் சிறப்பு இருக்கை வசதியை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை தீபா மாலிக். இவர், அண்மையில் (ஆகஸ்டு 20 அன்று) மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்களை டேக் செய்து ஓர் வீடியோவை பதிவிட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ஏறி, இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தது அவர் காருக்குள் நுழைவதைப் போன்ற வீடியோவையே வெளியிட்டுருந்தார்.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

இத்துடன், "இதுமாதிரயான வசதி வழங்கபட்டால் தான் உங்களின் நிறுவனத்தின் காரை வாங்குவேன். ஒவ்வொரு முறையும் காரில் ஏறி, இறங்கும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகின்றேன். சிறப்பு இருக்கை வசதிக் கொண்ட காரை உருவாக்கி தாருங்கள்" என்ற கோரிக்கையை தனது பதிவின் வாயிலாக முன் வைத்திருந்தார்.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

தீபா மாலிக் வெளியிட்ட இந்த கோரிக்கையை ஏற்று, மாற்று திறனாளிக்கு ஏற்ற இருக்கை வசதியை தன்னுடைய புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்த காரை பெண் வீராங்கனை பயன்படுத்தி பார்க்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

தீபா மாலிக் தனது கோரிக்கையை முன் வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையில் அதனை ஏற்று மஹிந்திரா நிறுவனம் இத்தகைய செயலைச் செய்திருப்பது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வசதி மாற்று திறன் கொண்டவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

இந்த இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களுக்கே இருக்கையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். காருக்குள் நுழைவது மற்றும் காரை விட்டு வெளியேறுவது ஆகியவற்றை அந்த ரிமோட் வாயிலாக செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இக்காருக்கான முன் பதிவு பணிகள் கடந்த 7ம் தேதி நாட்டில் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளன்றே 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகள் கிடைத்தன. அதுவும் 57 நிமிடங்களிலேயே அத்தனை புக்கிங்குகளும் கிடைத்தன.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

இதேபோல் இரண்டாவது நாளில் இரண்டு மணி நேரங்களில் மற்றுமொரு 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்தன. தற்போது வரை இக்காருக்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன. இத்தகைய அமோக வரவேற்பினால் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமே மிரண்டு நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

கோரிக்கை விடுத்த இரண்டே மாதங்களில் வேண்டியதை செய்து கொடுத்த Mahindra... இதுதாங்க நம்ம ஊர் நிறுவனம்!!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பெட்ரோல் வேரியண்டின் டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் 30ம் தேதியும், டீசல் வேரியண்டுகளின் டெலிவரி பணிகள் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கப்பட இருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமின்றி விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காக நிறுவனம் ஓர் முன் மாதிரி மாடலை தயார் செய்திருப்பதாகவும், அக்காரை நிறுவனம் பல பரீட்சையில் ஈடுபடுத்தத் தொடங்கியிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மிக விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷன் எக்ஸ்யூவி700 காரும் இந்திய சாலைகளை பதம் பார்க்க களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தற்போது பெட்ரோல், டீசல் எஞ்ஜின் கொண்ட எக்ஸ்யூவி700 காருக்கு கிடைப்பதைப் போலவே இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra developed special seat in xuv700 as requested by paralympian deepa malik
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X