அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

மஹிந்திரா நிறுவனம் அதன் இகேயூவி 100 எலெக்ட்ரிக் காரின் புகைப்படத்தை அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் வாயிலாக கசிய செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தைக் கீழே பார்க்காலம், வாங்க.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, மிக விரைவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இகேயூவி100 எனும் பெயரில் அக்காரை நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

இந்த நிலையில் மின்சார காரின் பக்கம் மக்களைக் கவர்வதற்கான முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் எலெக்ட்ரிக் கார்குறித்த முக்கய விபரங்களை நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது. காரின் படம் மற்றும் ரேஞ்ஜ் திறன் போன்ற சில முக்கிய விபரங்களை நிறுவனம் கசிய செய்திருக்கின்றது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

இகேயூவி 100 எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவலை தனது மின்சார வாகனங்களுக்கான தளத்தில் வெளியிட்டிருக்கின்றது. ஆகையால், இதன் அறிமுகம் மிக விரைவில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அறிமுகம் பற்றிய எந்த விபரத்தையும் மஹிந்திரா வெளியிடவில்லை.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

மஹிந்திரா நிறுவனம் இகேயூவி100 எலெக்ட்ரிக் காரை முதல் முறையாக கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இதனை மிக விரைவில் உற்பத்தி நிலைக்கு நிறுவனம் முன்னேற்றும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் எதிர்பார்த்திராத இக்கட்டான சூழ்நிலைகள் இந்த எதிர்பார்ப்பிற்கு முற்று புள்ளி வைத்தது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

கொரோனா வைரஸ் பரவலால் உருவான அசாதாரண சூழ்நிலை இக்காரின் உற்பத்தி மற்றும் அறிமுகத்தை தள்ளிப்போக வைத்துவிட்டது. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இகேயூவி100 எலெக்ட்ரிக் காரின் படம் இடம் பெற்றிருக்கின்றது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

இந்த படம் ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெற்றிருந்த மாதிரி இகேயூவி100 எலெக்ட்ரிக் காரைபோல் அப்படியே இருக்கின்றது. அதாவது, உற்பத்திக்கு உயர்த்தப்பட்டிருக்கும் இகேயூவி100 ஆட்டோ எக்ஸ்போவில் எந்த தோற்றம் மற்றும் அம்சங்களுடன் காட்சியளித்ததோ, அதோ வசதிகளுடனேயே விற்பனைக்கும் வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

அதேசமயம், சில மாற்றங்கள் இதில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் 150 கிமீ ரேஞ்ஜ் திறனில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 15.9 kWh பேட்டரி பேக் மஹிந்திரா இகேயூவி100 காரில் இடம் பெற இருக்கின்றது. இத்துடன் 54 பிஎச்பி மற்றும் 120 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரும் இதில் இடம் பெற இருக்கிறது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை நாட்டின் ஆரம்ப நிலை மின் வாகனங்களில் ஒன்றார உருவாக்கி வருகின்றது. இது விற்பனைக்கு வருமானால் டாடாவின் டிகோர் இவி மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதி சுசுகி வேகன்ஆர் எலெக்ட்ரிக் ஆகிய மின் வாகனங்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையை உணர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மின் வாகன தயாரிப்புகளை நாட்டில் களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் மிக விரைவில் மஹிந்திரா நிறுவனம் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

மஹிந்திரா இகேயூவி 100 எலெக்ட்ரிக் கார் ரூ. 8.25 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வருமானால் தற்போது நாட்டின் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவி-க்கு மிக சவாலாக அமையும்.

மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக கசிந்த இகேயூவி100 காரின் படங்கள்... எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருக்குது!!

டாடா நெக்ஸான் இவி ஓர் நாட்டின் மலிவு விலை பிரீமியம் தர எலெக்ட்ரிக் காராகும். இது இந்தியாவில் ரூ. 13.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ், டார்க் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் டார்க் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய தேர்வுகளில் டாடா நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Mahindra ekuv100 electric leaks via official website here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X