Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

மஹிந்திரா நிறுவனத்தின் (Mahindra Group) மற்றும் ஓர் செயல்படும் மஹிந்திரா பைனான்ஸ் (Mahindra & Mahindra Financial Services Limited), குயிக்லிஸ் (Quiklyz) எனும் புதிய தொழில் பிரிவைத் தொடங்கியிருக்கின்றது. இந்த பிரிவின் முக்கிய அம்சம் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) மற்றுமொரு அங்கமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட் (Mahindra & Mahindra Financial Services Limited) செயல்பட்டு வருகின்றது. இது ஓர் நிதி நிறுவனம் ஆகும். பன்-நிலைகளில் இது கடன் உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின்கீழே புதிதாக குயிக்லிஸ் (Quiklyz) எனும் தொழில் பிரிவை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

இது ஓர் குத்தகை (lease) மற்றும் மாத சந்தா (subscription) வழங்கும் பிரிவாக செயல்படும். வாகனங்களுக்காக மட்டுமே இந்த பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, வாகனங்களை மாத சந்தா மற்றும் லீசு திட்டங்களின் வழங்க குயிக்லிஸ் உதவும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த முயற்சி ஒரு நவீன கால டிஜிட்டல் தளமாகும். இது பதிவு, காப்பீடு போன்ற தொந்தரவில்லா வாகன இயக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவும்.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

ஓர் நபர் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால் ஓர் மிகப்பெரிய தொகை முன் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை ரொக்கமாகவே அல்லது வங்கிகளிடம் கடன் பெற்று மாதத் தவணை அடிப்படையிலேயே செலுத்த வேண்டியிருக்கும். இத்துடன், கூடுதலாக பராமரிப்பு, இன்சூரன்ஸ் மற்றும் பதிவு கட்டணம் போன்றவற்றையும் செய்ய வேண்டியிருக்கும்.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

இதுமாதிரியான எந்தவொரு தொந்தரவும் இல்லா இயக்கத்தை வழங்கும் வகையில் மாத சந்தா மற்றும் லீசு திட்டத்தை வழங்கும் குயிக்லிஸ் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பராமரிப்பு, சாலையோர உதவி போன்றவற்றையும் நிறுவனம் வழங்க இருக்கின்றது.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

முதல் கட்டமாக நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த தொழிலை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. அதில், சென்னையும் அடங்கும். இத்துடன், பெங்களூரு, தலைநகர் டெல்லி, குருகிராம், மும்பை, நொய்டா மற்றும் புனே உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

மிக விரைவில் நாட்டின் பிற 30 நகரங்களிலும் குயிக்லிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த மஹிந்திரா ஆயத்தமாகி வருகின்றது. அடுத்த வருடத்தில் இந்த இலக்கை எட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, நிறுவனம் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

தங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமின்றி பிற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பொருட்டு பிற நிறுவனங்கள் உடன் மஹிந்திரா ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆகையால், விரைவில் மற்ற நிறுவனங்களுடனான கூட்டணி பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

குயிக்லிஸ் திட்டம் தனி நபர் வாகன பயன்பாடு (Business-to-consumer) மற்றும் வர்த்தக ரீதியான (Business-to-Business service) பயன்பாடு என பிரிவினருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கார்பரேட் நிறுவனங்கள், கால் டாக்சி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவராலும் மஹிந்திராவின் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்களில் வாகன லீசு மற்றும் மாத சந்தா தொழிலும் ஒன்று என்றும், இதை முன்னிட்டே தங்கள் நிறுவனம் இந்த சேவையில் களமிறங்கியிருப்பதாக நிறுவனத்தின் விசி ரமேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழிலுக்காக நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Mahindra புதிய நிறுவனம் Quiklyz அறிமுகம்! பராமரிப்பு, காப்பீடு போன்ற தொந்தரவுகளை ஒழிக்க இது உதவும்!

மஹிந்திரா நிறுவனம் இந்தியர்களைக் கவரும் பொருட்டு புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. இந்த நிலையில், கூடுதல் சேவையை இந்தியர்களுக்கு வழங்கும் வகையில் தற்போது லீசு மற்றும் மாத சந்தா திட்டத்தை நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. இத்திட்டத்திற்கு மிக விரைவில் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra finance launches quiklyz vehicle leasing and subscription business
Story first published: Wednesday, November 17, 2021, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X