மஹிந்திராவின் ஃப்யூரியோ-7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.8 லட்சம்

மஹிந்திரா ட்ரக் & பஸ் நிறுவனம் ஃப்யூரியோ 7 (Furio 7) என்ற பெயர் கொண்ட அதன் புதிய லாரியை சந்தையில் இன்று (செப்.15) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மஹிந்திரா லாரியை பற்றிய கூடுதல் விபரங்களை விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

மஹிந்திரா ட்ரக் & பஸ், மஹிந்திரா க்ரூப்பில் அங்கம் வகிக்கும் ஒரு துணை பிராண்டாகும். பெயருக்கு ஏற்ப இந்த பிராண்டின் கீழ் மஹிந்திராவின் லாரிகளும், பேருந்துகளும் தான் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

மஹிந்திரா ட்ரக் & பஸ் நிறுவனத்தில் ICV எனப்படும் இடைநிலை வணிக வாகனங்களின் பிரிவில் ஃப்யூரியோ வரிசை லாரிகள் நிலைநிறுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தான் தற்போது ஃப்யூரியோ 7 களமிறக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

இத்தாலியில் உள்ள மஹிந்திராவின் வடிவமைப்பு கூட்டணி நிறுவனமான பினின்ஃபரினா இந்த லாரியை வடிவமைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில், மஹிந்திரா ஃப்யூரியோ பொறாமைமிக்க தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. எங்கள் லாரிகள் வரிசையில் இத்தகைய வாகனத்தை சேர்ப்பது இடைநிலை வணிக வாகன (ICV) பிரிவிற்கு ஒரு புதிய விடியலை குறிக்கிறது மற்றும் மஹிந்திராவை ஒரு முழு அளவிலான வணிக வாகன பிராண்டாக உருவாக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

ஃப்யூரியோ போன்ற இடைநிலை வணிக லாரிகளின் மூலமாக புதிய சந்தையில் களமிறக்குவதாக கடந்த 2019 ஜனவரி 29ஆம் தேதி மஹிந்திரா ட்ரக் & பஸ் நிறுவனம் முதன்முதலாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஃப்யூரியோ 7 லாரியின் அறிமுகத்தின் மூலம் மஹிந்திரா ட்ரக் & பஸ் நிறுவனம் மஹிந்திராவின் முழு அளவிலான வணிக வாகன பிரிவை மேலும் பலப்படுத்தியுள்ளது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

ஃப்யூரியோவுடன் 'அதிக லாபம் கிடைக்கும் அல்லது ட்ரக்கை திருப்பு தந்துவிடுங்கள்' என்ற முன்மொழிவை வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. லாரிகளுடன் பேருந்துகளையும் தயாரிக்கும் மஹிந்திரா ட்ரக் & லாரி பிராண்டின் கீழ் அதிக எடை மற்றும் குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

மஹிந்திரா ஃப்யூரியோ வாகனங்கள் அனைத்தும் பிஎஸ்6-க்கு இணக்கமானவை. அதிக எடையை சுமப்பதுடன் அதிக இலாபத்திற்கான உத்தரவாதத்தை வழங்கும் வாகனங்களாக ஃப்யூரியோ லாரிகளை விளம்பரப்படுத்தும் மஹிந்திரா ட்ரக் & பஸ் நிறுவனம் இந்த லாரிகள் ஃப்யூல்ஸ்மார்ட் தொழிற்நுட்பத்துடன் சிறந்த மைலேஜை வழங்கக்கூடியது என தெரிவிக்கிறது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ 7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!!

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃப்யூரியோ 7 அதன் பிரிவிலேயே சிறந்த கேபின், சவுகரியம், பாதுகாப்பு மற்றும் தொழிற்நுட்ப வசதிகளை பெற்று வந்துள்ளது. மஹிந்திரா ஃப்யூரியோ லாரிகளுக்கு 5 வருட/ 5 லட்ச மாற்றத்தக்க உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அத்துடன் இலவச 5 வருட வரம்பற்ற கிமீ வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் ஃப்யூரியோ லாரிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகிறது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ-7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.8 லட்சம்

4-டயர் கார்கோ, 6-டயர் கார்கோ ஹெவி-ட்யூட்டி மற்றும் 6-டயர் டிப்பர் என்ற மூன்று விதமான வடிவங்களில் புதிய மஹிந்திரா ஃப்யூரியோ 7 விற்பனைக்கு கிடைக்கும். இதில் எடை குறைவான 4-டயர் கார்கோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற இரு வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.15.18 லட்சம் மற்றும் ரூ.16.82 லட்சமாகும்.

மஹிந்திராவின் ஃப்யூரியோ-7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.8 லட்சம்

புதிய ஃப்யூரியோ 7 லாரியின் 4-டயர் கார்கோ வேரியண்ட்டில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 81.2 பிஎச்பி மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே கார்கோ 7 ஹெவி-ட்யூட்டி மற்றும் ட்ரிப்பர் வேரியண்ட்களில் இதனை காட்டிலும் ஆற்றல்மிக்க 3.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் ஃப்யூரியோ-7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.8 லட்சம்

இந்த புதிய லாரிகளின் உட்புற கேபினில் iMAXX எனப்படும் மஹிந்திராவின் அதிநவீன டெலிமேட்டிக்ஸ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா அதன் கமர்ஷியல் வாகனங்களுக்கான அம்பஸடராக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை கொண்டுள்ளது. அஜய் தேவ்கான் 30 வருடங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றில் இரு மோட்டார்சைக்கிளில் ஒரே நேரத்தில் பயணித்து வருவது போல் நடித்திருப்பார்.

மஹிந்திராவின் ஃப்யூரியோ-7 லாரிகள் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.14.8 லட்சம்

இது பாலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான காட்சியாகும். தற்போது இதே பாணியில், இந்தியாவின் இந்த முதல் எடை-குறைவான கமர்ஷியல் வாகனத்தின் விளம்பர வீடியோவில் நடித்துள்ளார். என்ன, அப்போது இரு மோட்டார்சைக்கிள்கள், இப்போது இரு ஃப்யூரியோ 7 லாரிகள் அவ்வளவு தான் வித்தியாசம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Furio 7 Launched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X