Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்வு!
மஹிந்திரா எஸ்யூவி ரக கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிய தார் எஸ்யூவியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்துவது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசீலிப்பது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக, சந்தை சூழல் சரியில்லாத நிலையில் கார் விலை உயர்வை அனைத்து நிறுவனங்களும் தள்ளிப் போட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்ததால், புத்தாண்டு முதல் விலையை உயர்த்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை வைத்து, ஜனவரியில் கார் விலையை பல முன்னணி நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அந்த வகையில், எஸ்யூவி தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.

அதன்படி, தனது அனைத்து கார்களின் விலையையும் 1.9 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். இதன்மூலமாக, மஹிந்திரா கார்களின் விலை ரூ.4,500 முதல் ரூ.40,000 வரை கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மஹிந்திரா கார்களின் விலை உயர்வும் நேற்றுமுதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் 1 முதல் ஜனவரி 7 வரை புதிய தார் எஸ்யூவியை புக்கிங் செய்தவர்களுக்கும் புதிய விலை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி வீஜே நக்ரா கூறுகையில்,"மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனம் மிக கடுமையாக அதிகரித்துள்ளதையடுத்து, கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விலை உயர்வை தள்ளிப் போடுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆனால், தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை உயர்வு இருப்பதால், ஜனவரி 8, 2021 முதல் கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.