வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதிக மைலேஜ் தரக் கூடிய மினி ட்ரக்கை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ட்ரக்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் அதன் வர்த்தக வாகன பிரிவில் புதிய மாடல் வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 'சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக்' எனும் பெயரில் புதிய மினி ட்ரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இது இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். சுப்ரோ ப்ராஃபிட் மினி மற்றும் சுப்ரோ ப்ராஃபிட் மேக்ஸி எனும் இருவிதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் மினி மாடலின் ஆரம்ப விலை ரூ. 5.40 லட்சம் ஆகும். அதேசமயம், இதன் உயர்நிலை வேரியண்டான மேக்ஸியின் விலை ரூ. 6.22 லட்சம் ஆகும்.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இரு விலைகளும் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இப்புதிய வர்த்தக பயன்பாட்டு வாகனம் சுப்ரோ மினி ட்ரக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதிக லோடு ஏற்றும் வசி, அதிக மைலேஜ், கூடுதல் லாபம் மற்றும் விலை குறைவு மற்றும் அதிக திறன் வாய்ந்தது என பல்வேறு சிறப்புகளுடன் புதிய சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக் உருவாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சுப்ரோ ப்ராஃபிட் மினி ட்ரக்கில் மஹிந்திராவின் பவர்ஃபுல் டைரக்ட் இன்ஜெக்சன் டீசல் பிஎஸ்-6 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 19.4 கிலேவாட்டை வெளியேற்றும் திறன் கொண்டது. சிறந்த ஆக்சலரேஷன் மற்றும் பிக்-அப்பை இது வழங்கும்.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இது ஓர் 4 ஸ்ட்ரோக், 2 சிலிண்டர் 909 சிசி எஞ்ஜின் ஆகும். அதிகபட்சமாக 26எச்பி மற்றும் 55 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸிலேயே இந்த அதிகபட்ச திறனை எஞ்ஜின் வெளியேற்றுகிறது. இத்துடன், பவர் மற்றும் ஈகோ எனப்படும் இரு விதமான மோட்கள் ட்ரக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இது அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 23.30 கிமீ தூரம் வரை மைலேஜ் தரும். சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக் மினி சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த தேர்வில் கிடைக்கும் சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக் மினி அதிகபட்சமாக 20.01 கிலோவாட்டை வெளியேற்றும் திறன் கொண்டது.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த புதிய தயாரிப்பின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சிறப்பு சலுகைகளை மஹிந்திரா அறிவித்துள்ளது. ஐந்தாண்டு கால கடன் திட்டம் மற்றும் 12.99 சதவீதம் வட்டி என சிறப்பு திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது. இஎம்ஐ திட்டத்தின்கீழ் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகையாக 100 சதவீதம் கடன் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வர்த்தக வாகன துறைக்கான புதிய மஹிந்திரா மினி ட்ரக்! இதோட மைலேஜ் திறன் எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சுப்ரோ ப்ராஃபிட் ட்ரக்கில் 13 இன்ச் டயர் பயன்படுத்ப்பட்டுள்ளது. இந்த டயருடன் இணைக்கப்பட்ட நிலையில் ட்ரக்கின் உயரம் 170 மிமீட்டராக இருக்கின்றது. ஆகையால், எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இந்த வாகனம் சமாளித்துவிடும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த மினி ட்ரக் 1050 கிலோ வரை ஏற்றி செல்ல உதவும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Launches New Supro Profit Truck Range In India. Read In Tamil.
Story first published: Thursday, July 8, 2021, 19:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X