எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஸ்கார்பியோ எஸ்யூவி ரக காரில் குறைந்த விலை வேரியண்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தேர்வின் விலை மற்றும் பிற சுவாரஷ்ய தகவல்களைக் கீழே காணலாம்.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஸ்கார்பியோ காரும் ஒன்று. இந்த கார் மாடலிலேயே நிறுவனம் குறைந்த விலை வேரியண்டை புதிதாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்3 ப்ளஸ் எனும் வேரியண்டே இப்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் தேர்வாகும்.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த தேர்விற்கு ரூ. 11.67 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது புனே எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்5 வேரியண்ட்டிற்காக கீழாக புதிய எஸ்3 ப்ளஸ் வேரியண்ட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த புதிய வேரியண்டிலும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில மாற்றங்களுடன் (ட்யூன்) நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இந்த ட்யூனை திறனை லேசாக குறைக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ஆகையால், மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 ப்ளஸ் வேரியண்டில் இருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 120 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும். பிற ஸ்கார்பியோ வேரியண்டுகளில் இதே எஞ்ஜின் 140 பிஎச்பி மற்றும் 319 என்எம் டார்க் திறன்களை வெளியேற்றுகின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. புதிய எஸ்3 ப்ளஸ் வேரியண்ட் ஏழு மற்றும் ஒன்பது இருக்கை தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுதவிர, எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளையும் இக்கார் தாங்கியிருக்கின்றது.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில், 17 இன்சிலான சில்வர் நிற ஸ்டீல் வீல், முன் மற்றும் பின் பக்கத்தில் கருப்பு நிறத்திலான பம்பர்கள், வினில் இருக்கைகள், பவர் வின்டோ, ஃபாலோவ் மீ ஹோம் மின் விளக்குகள் (இருட்டான நேரத்தில் வெளிச்சத்தை வழங்க உதவும்), இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

புதிய எஸ்3 ப்ளஸ் வேரியண்டுக்கு மேல் இடத்தில் அமர்ந்திருக்கும் எஸ்5 வேரியண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் இத்தேர்வில் சற்று குறைவான அம்சங்களே இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், ஃபூட் ஸ்டெப், வீல் கேப், ஃபேப்ரிக் இருக்கை, ஆட்டோ டூர் லாக்கிங் சிஸ்டம், பெரிய தண்ணீர் கேன் மற்றும் கப் ஹோல்டர்கள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

எதிர்பார்க்கவே இல்ல... மஹிந்திரா ஸ்கார்பியோவில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றை எஸ்3 ப்ளஸ் தேர்வு பெறவில்லை என்றாலும் இக்கார் அட்டகாசமானதாகவே காட்சியளிக்கின்றது. இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் ஸ்கார்பியோ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக எஸ்5, எஸ்7, எஸ்9, எஸ்11 ஆகிய தேர்வுகளில் மட்டுமே ஸ்கார்பியோ கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே ஐந்தாவதாக புதிய எஸ்3 ப்ளஸ் தேர்வு களமிறக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Launches Scorpio S3 Plus Base Variant Is In India At Rs.11.67 lakh. Read In Tamil.
Story first published: Friday, February 12, 2021, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X