மஹிந்திரா மராஸ்ஸோ காரில் விரைவில் டீசல் ஏஎம்டி மாடல் அறிமுகம்... முக்கிய விபரங்கள் கசிந்தது!

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விபரம் கசிந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

இந்தியாவின் எம்பிவி கார் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளது. மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடையிலான ரகத்தில் இந்த மாடல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

வடிவமைப்பு, கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது. இந்த கார் தற்போது டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைத்து வருகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் இந்த காரில் டீசல் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு குறித்து ரஷ்லேன் தளம் மூலமாக சில முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

அதன்படி, மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டீசல் ஏஎம்டி மாடலானது எம்2, எம்4 ப்ளஸ் மற்றும் எம்6 ப்ளஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெற உள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடலில் ஈக்கோ மற்றும் பவர் என இரண்டு டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட உள்ளன. ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது, அதிகபட்ச பவர் 99 பிஎச்பி என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ டீசல் ஏஎம்டி மாடல் விபரம் கசிந்தது!

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் விரைவில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புதிய பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra will introduce diesel AMT option in Marazzo MPV car in India soon and some specification details leaked in online.
Story first published: Friday, February 12, 2021, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X