மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா மராஸ்ஸோ பெட்ரோல் மாடல் சோதனையின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காடிவாடி செய்திதளம் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தற்சமயம் மராஸ்ஸோவை எம்2, எம்4 மற்றும் எம்6 வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த மஹிந்திரா காரை 7-இருக்கை அல்லது 8-இருக்கை வெர்சனிலும் வாங்கலாம்.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

மஹிந்திரா மராஸ்ஸோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.25 லட்சத்தில் இருந்து ரூ.13.59 லட்சம் வரையில் உள்ளன. இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மஹிந்திரா நிறுவனம் முதன்முதலாக மராஸ்ஸோவை கடந்த 2018ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

இதன் பிஎஸ்6 வெர்சன் சில மாதங்களுக்கு முன்புதான் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. பிஎஸ்6 மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்த காருக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த டாப் எம்8 ட்ரிம்மின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

ஹைப்ரீட் சேசிஸில் தயாரிக்கப்படும் இந்த ப்ரீமியம் எம்பிவி காரை மஹிந்திரா நிறுவனம் சுறாவின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கிறது. மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற பிரபலமான எம்பிவி கார்களுக்கு மஹிந்திரா மராஸ்ஸோ விற்பனையில் போட்டியாக விளங்கி வருகிறது.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

ஆனால் உண்மையில் அவை இரண்டை காட்டிலும் மராஸ்ஸோ சில விஷயங்களில் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஒரே ஒரு ட்ரான்ஸ்மிஷன் மற்றும் என்ஜின் தேர்வு இந்த மஹிந்திரா எம்பிவி காருக்கு பெரிய பின்னடவை தருகிறது.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

இதனை சரி செய்யவே மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோவிற்கு பெட்ரோல் என்ஜின் தேர்வை கொண்டுவர ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியே, இந்த சோதனை ஓட்டம். இந்த சோதனை புதிய பெட்ரோல் என்ஜினிற்காக இல்லாவிடினும், டீசல் என்ஜினிற்கு கூடுதல் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுக்காகவாவது இருக்கும் என கூறப்படுகிறது.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

புதிய பெட்ரோல் என்ஜினால் என்ன நன்மை என்றால், மராஸ்ஸோவின் ஆரம்ப விலை குறையும், கூடுதல் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும். இந்த வகையில் மராஸ்ஸோவில் விரைவில் 1.5 லிட்டர் எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எர்டிகாவின் முதல் இடத்திற்கு போட்டி!! மராஸ்ஸோவில் ஆற்றல்மிக்க பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் மஹிந்திரா

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதேநேரம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் மராஸ்ஸோவிற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo Petrol Spotted Testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X