பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

மஹிந்திரா நிறுவனம் அதன் புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள், முன்பதிவுகள் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காருக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தான் இதன் அடுத்த தலைமுறை வெர்சனாக கொண்டுவரப்படுகின்ற எக்ஸ்யூவி700 மாடலை மஹிந்திரா மிகவும் விமர்சையாக அறிமுகம் செய்து வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

ஏனெனில் எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறையாக கொண்டுவரப்படும் எக்ஸ்யூவி700 தோற்றத்தில், என்ஜின் தேர்வுகளில் மற்றும் வசதிகளில் என அனைத்திலும் முற்றிலுமாக புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த காரை பற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

இப்படிப்பட்ட தற்போதைய நிலையில் தான் எக்ஸ்யூவி700 காரின் விலைகளை மஹிந்திரா அறிவித்துள்ளது. இதன்படி, புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.99 லட்சமாகும். ஆர்டிஓ, இன்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை சேர்த்து ஆன்-ரோடு விலை இன்னும் சற்று அதிகரிக்கும் அவ்வளவுதான்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

எம்.எக்ஸ் மற்றும் ஏ.எக்ஸ் (அட்ரினோ எக்ஸ்) என்ற இரு விதமான வேரியண்ட்களில், பெட்ரோல் & டீசல் என்ற என்ஜின் தேர்வுகளில், 5-இருக்கை & 7-இருக்கை தேர்வுகளில் இந்த புதிய மஹிந்திரா கார் விற்பனை செய்யப்பட உள்ளதை முதலில் இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம். ஆனால் எம்.எக்ஸ் வேரியண்ட்டை 5-இருக்கைகளுடன் மட்டுமே பெற முடியும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

அதேபோல் இந்த ஆரம்ப-நிலை வேரியண்ட்டிற்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படவில்லை, மேனுவல் தேர்வு மட்டுமே. ரூ.11.99 லட்சம் என்பது பெட்ரோல் என்ஜின் உடன் எம்.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். டீசல் என்ஜின் உடன் இதனை காட்டிலும் ரூ.50,000 அதிகமாக உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

ஏ.எக்ஸ் வரிசையில் ஏ.எக்ஸ்3, ஏ.எக்ஸ்5 மற்றும் ஏ.எக்ஸ்7 என்ற ட்ரிம் நிலைகள் அடங்குகின்றன. எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி700 காரின் விரிவான விலை விபரங்கள் அட்டவணையாக இதோ...

MX Series
Fuel Type 5-Seater (MT)
MX Petrol ₹11.99 Lakh
Diesel ₹12.49 Lakh
AndrenoX Series
Fuel Type MT AT
AX3

(5-Seater)

Petrol ₹13.99 Lakh ₹15.59 Lakh
Diesel ₹14.59 Lakh** ₹16.19 Lakh
AX5

(5-Seater)

Petrol ₹14.99 Lakh** ₹16.59 Lakh
Diesel ₹15.59 Lakh** ₹17.19 Lakh**
AX7

(7-Seater)

Petrol ₹17.59 Lakh ₹19.19 Lakh
Diesel ₹18.19 Lakh ₹19.79 Lakh
**Also available in 7-Seater at an additional ₹60,000

இதில் ** கொடுக்கப்பட்டுள்ள ட்ரிம் நிலைகளை 7-இருக்கைகளுடனும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஆனால் அதற்கு கூடுதலாக ரூ.60,000 செலுத்த வேண்டி இருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

மேலும், ஏ.எக்ஸ்7 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கான லக்சரி தொகுப்பு ரூ.1.8 லட்சத்திலும், ஏ.எக்ஸ்7 டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கான அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் ரூ.1.3 லட்சத்திலும் கிடைக்குமாம். எனவே எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்7 டீசல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை லக்சரி தொகுப்பு மற்றும் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் எப்படியிருந்தாலும் ரூ.24 லட்சத்தை கடந்துவிடும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

மஹிந்திரா தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் அனைத்தும் எக்ஸ்யூவி700 காரை வாங்கும் முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்த விலைகளில் சிறிது அதிகரிப்பு கொண்டுவரப்படும். வாடிக்கையாளர்கள் புதிய எக்ஸ்யூவி700 காரை வருகிற அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களில் காணலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

டெஸ்ட் ட்ரைவ் டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்தும், ஜெய்பூர், கொச்சி, பாட்னா போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்தும் வழங்கப்படுமாம். டெலிவிரிகள் எப்போதில் இருந்து துவங்கவுள்ளன என்பது இதனை தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

எங்களுக்கு தெரிந்தவரையில், எக்ஸ்யூவி700 பெட்ரோல் கார்களின் டெலிவிரி முதலில் ஆரம்பிக்கப்படும். பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், எக்ஸ்யூவி500-ஐ காட்டிலும் அளவில் பெரியதாக கொண்டுவரப்படும் எக்ஸ்யூவி700 குறிப்பாக அகலத்திலும், வீல்பேஸ் நீளத்திலும் பெரியதாக விளங்குகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலைகள் அறிவிப்பு!! ஆரம்ப விலை இவ்வளவுதானா!

இதனால் காரின் உள்ளே இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை பயணிகளுக்கு கூடுதல் இடவசதி தாராளமாக கிடைக்கும். என்ஜின் தேர்வுகளை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தாரில் இருந்து எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது. ஆனால் இரண்டிலும் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் வித்தியாசம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Price Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X