மலிவு விலையில் தார்? புதிய விலைகுறைந்த வேரியண்ட் மூலம் பட்ஜெட் கார் பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா!..

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் குறைந்த விலைக் கொண்ட தார் எஸ்யூவி-யை களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் தார் எஸ்யூவி-யும் ஒன்று. புதிய தலைமுறையாக கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியது. அப்போதில் இருந்து தற்போது வரை இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் பல மாதங்கள் காத்திருக்கின்ற வகையில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இத்தகைய வரவேற்பைத் தக்கவைத்துக் கொள்ள மஹிந்திரா நிறுவனம் திட்டம் தீட்டியிருக்கின்றது. அதாவது, இக்கார் மாடலில் குறைந்த விலை வேரியண்டை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதுகுறித்த தகவலை டீம்பிஎச்பி ஆங்கில தளம் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது. இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி இப்புதிய வேரியண்ட் ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 7 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

மேலும், புதிய விலைக்குறைந்த தார் கார்குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் தார் எஸ்யூவி கார்களைக் காட்டிலும் சற்று சொகுசு மற்றும் சிறப்பம்சங்களைக் குறைவாக பெற்ற மாடலாக மலிவு விலையில் தயாராகி வரும் தார் இருக்கும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

தற்போது விற்பனையில் இருக்கும் தார் எஸ்யூவி கார்கள் ரூ. 9 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதைக் காட்டிலும் குறைவான விலையில் இன்னுமொரு தார் விற்பனைக்கு வருமானால் அது நிச்சயம் சிறப்பு வசதிகளை குறைவாக பெற்றதாகவே இருக்கும் என இந்திய ஆட்டோ மொபைல்ஸ்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

சிறிய வீல், சிறிய உருவம், குறைந்த திறன் கொண்ட எஞ்ஜின் ஆகியவற்றுடன் மலிவு விலை தார் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகின்றது. லைட் வெர்ஷனாக வரும் தார் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதே எஞ்ஜின்தான் பொலிரோவின் குறைந்த விலை வேரியண்டில் இடம் பிடித்து வருகின்றது. தார் எஸ்யூவியில் 4X2 வெர்ஷனை மஹிந்திரா களமிறக்காது என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில், இப்பார்வையை தகர்த்தெறியும் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் குறைந்த விலை தார் எஸ்யூவி மட்டுமின்றி எக்ஸ்யூவி700, மஹிந்திரா எக்ஸ்யூவி900 மற்றும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ உள்ளிட்ட புதிய மாடல்கள் சிலவற்றையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

பட்ஜெட் வாகன பிரியர்களை குறி வைக்கும் மஹிந்திரா... மிக மலிவு விலையில் தார் எஸ்யூவி புதிய வேரியண்ட் அறிமுகம்!

தொடர்ந்து மின்சார வாகன சந்தையில் மீண்டும் கால் தடம் பதிக்கும் வகையில் இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி300 ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையிலேயே பட்ஜெட் கார் பிரியர்களைத் தன்பக்கம் கவரும் வகையில் மலிவு விலை தார் கார் உற்பத்தியில் நிறுவனம் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Planning For Cheaper Version Of Thar: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Tuesday, May 18, 2021, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X