9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

மஹிந்திரா பொலிரோ நியோவைத் தொடர்ந்து பொலிரோ நியோ ப்ளஸ் 9 இருக்கை வசதிகளுடன் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக பொலிரோ நியோ இருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே புதிதாக ஒன்பது இருக்கைகள் கொண்ட வேரியண்டை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒன்பது இருக்கைகள் கொண்ட காரானது பொலிரோ நியோ ப்ளஸ் எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

மஹிந்திரா நிறுவனம் புதுமுக பொலிரோ நியோ காரை அதன் டியூவி300 மாடலை ரீபிளேஸ் செய்யும் வகையில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது 5+2 இருக்கை வசதிகள் கொண்ட மாடலாகும். தனது புதிய வாகன கட்டமைப்பு தளமான ஜென்3 பிளாட்பாரத்தில் வைத்தே இப்புதிய பொலிரோ நியோ காரை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தனது புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய கார்களையும் நிறுவனம் உருவாக்கி வருகின்றது. இந்த நிலையிலேயே புதிதாக பொலிரோ நியோ ப்ளஸ் மாடலையும் ஜென்3 பிளாட்பாரத்தில் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

இதுகுறித்து கார்அண்ட்பைக் ஆங்கில தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மஹிந்திரா நிறுவனம் புதிய பொலிரோ நியோ ப்ளஸ் 9 சீட்டர் மாடல் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அக்காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

புதிய பொலிரோ நியோ ப்ளஸ் அண்மையில் அறிமுகமான பொலிரோ நியோவைக் காட்டிலும் அதிக இட வசதிக் கொண்ட வாகனமாக தயாராகி வருகின்றது. 400 முதல் 410 மிமீ வரையிலான நீளத்தில் நியோ ப்ளஸ் உருவாகி வருவதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

தொடர்ந்து, இந்த காரை பொலிரோ நியோவைக் காட்டிலும் சற்று ஸ்போர்ட்டியான ஸ்டைலில் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. எனவே, அதிக இருக்கை, சற்று மாறுபட்ட தோற்றம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் கூடுதல் வசதிகளுடன் பொலிரோ நியோ ப்ளஸ் இந்திய சாலைகளை பதம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

இன்னும் பொலிரோ நியோ ப்ளஸ் கார்குறித்து முக்கிய விவரங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றன. மிக விரைவில் இதுகுறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பொலிரோ நியோ ப்ளஸ் மட்டுமின்றி இன்னும் சில புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

9 இருக்கையில் வருகிறது மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் கார்? ரொம்ப சீக்கிரமாவே வர இருக்கிறது!!

Source: carandbike

அந்தவகையில், பொலிரோ நியோ ப்ளஸ் காருக்கு அடுத்தபடியாக எக்ஸ்யூவி700 கார் உள்ளது. இந்த காரை சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணியில் ஏற்கனவே நிறுவனம் களமிறங்கிவிட்டது. ஆகையால், மஹிந்திராவின் அடுத்த அறிமுகமாக எக்ஸ்யூவி 700 இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Planning To Launch 9-Seater Bolero Neo Plus SUV Soon. Read In Tamil.
Story first published: Thursday, July 15, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X