மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

2021 மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் பொலிரோ நியோ முத்திரை உடன் தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் சப்-4 மீட்டர் காராக டியூவி300 கடந்த 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்யூவி, எம்யுவி என இரு விதமான தோற்றத்தை கொண்ட காராக இது பார்க்கப்பட்டாலும், உண்மையில் டியூவி300 வாடிக்கையாளர்களை கவர்வதில் கோட்டை விட்டது என்றுதான் சொல்லியாக வேண்டும்.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

இருப்பினும் இதன் விற்பனையை கடந்த 2020ஆம் ஆண்டில்தான் மஹிந்திரா நிறுவனம் நிறுத்தியது. விற்பனை நிறுத்தப்பட்டதற்கு பிறகு டியூவி300 காரின் சோதனை ஓட்டத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்திருந்தோம். அப்போது கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

இந்த நிலையில் தற்போது மஹராஷ்டிரா மாநிலத்தில் காடு போன்று இருக்கும் பகுதியில் டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. மோட்டார்பீம் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளது.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

அதுமட்டுமின்றி காரை சுற்றி ஆட்கள் நிற்கின்றனர். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அங்கு டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரை வைத்து தொலைக்காட்சி விளம்பர வீடியோவிற்கான படப்பிடிப்பு நடந்து வருவதை அறிய முடிகிறது.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

இது டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் என தகவல்கள் கூறினாலும், கார் பார்ப்பதற்கு விற்பனை நிறுத்தப்பட்ட டியூவி300-ஐ போன்றுதான் காட்சியளிக்கிறது. அதேநேரம் சில டிசைன் அப்டேட்களையும் காரில் பார்க்க முடிகிறது. குறிப்பாக பின்பக்க டி-பில்லர் ஆனது சற்று சாய்வாக மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

இதனால் இந்த டியூவி300 கார் 90களின் இறுதியில் விற்பனையில் இருந்த ஸ்டேஷன் வேகன் கார்களை ஞாபகப்படுத்துகின்றன. அதேபோல் காரின் முன்பக்கம் இருபக்கங்களிலும் செங்குத்தாக 3-ஸ்லாட்களை கொண்ட புதிய க்ரில் டிசைன் உடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

அப்படியே கீழே வந்தால், முன்பக்க பம்பர் அகலமான காற்று ஏற்பான் உடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகளுக்கான குழிகளும் கிடைமட்ட வடிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில்லேம்பின் வடிவம் மற்றும் பம்பரின் வடிவத்தில் மறுவேலை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் டியூவி300 எஸ்யூவி காரை கொண்டுவரும் மஹிந்திரா!! புதிய டாடா சஃபாரியை சமாளிக்கனுமே...

இது எல்லாத்தையும் விட முக்கியமானதாக கார் பொலிரோ நியோ என்ற முத்திரையை கொண்டுள்ளது. இவற்றுடன் காரின் உட்புறமும் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவரலாம். மறைப்பு எதுவும் இல்லாமல் புதிய மஹிந்திரா டியூவி300 கார் நமது கண்களுக்கு காட்சியளித்துள்ளதால் இதன் அறிமுகம் மிக விரைவில், வரும் வாரங்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra TUV300 Facelift Spied With Bolero NEO Badge During TVC Shoot
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X