இந்திய வாகன சந்தையை தெறிக்கவிட மஹிந்திரா ஆயத்தம்... 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை களமிறக்குகிறது!

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கான மவுசு இந்தியாவில் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், மின்சார வாகன தயாரிப்பு நோக்கி வாகன நிறுவனங்கள் தங்களது கவனத்தை திருப்பி இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரை பெற்றுள்ள மஹிந்திரா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே மின்சார வாகன தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது தெரிந்ததே.

தற்போது மின்சார வாகன விற்பனைக்கு சாதகமான சூழல் உருவாகி இருப்பதால், அதிக மின்சார வாகனங்களை களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், வரும் 2027ம் ஆண்டுக்குள் 8 எஸ்யூவி கார்கள் உள்பட மொத்தம் 16 மின்சார வாகனங்களை களமிறக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்சார கார்கள் மற்றும் இலகு ரக மின்சார வர்த்தக வாகனங்களும் இதில் அடங்கும்.

இந்திய வாகன சந்தையை தெறிக்கவிட மஹிந்திரா ஆயத்தம்... 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை களமிறக்குகிறது!

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு வருவாய் முடிவுகளை வெளியிட்டபோது இந்த எதிர்கால திட்டங்கள் குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ராஜேஷ் ஜெஜிரிகர் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்," வரும் 2027ம் ஆண்டுக்குள் மொத்தம் 13 புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்திய வாகன சந்தையை தெறிக்கவிட மஹிந்திரா ஆயத்தம்... 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை களமிறக்குகிறது!

இதில், 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களும் அடங்கும். 2025 மற்றும் 2027ம் ஆண்டு காலக்கட்டத்தில் மொத்தம் 4 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை களமிறக்க உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வாகன சந்தையை தெறிக்கவிட மஹிந்திரா ஆயத்தம்... 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை களமிறக்குகிறது!

ராஜேஷ் ஜெஜுரிகர் குறிப்பிட்டுள்ள 13 புதிய எஸ்யூவி மாடல்களில் தார் எஸ்யூவியின் 5 டோர் மாடல், புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மற்றும் எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

இந்திய வாகன சந்தையை தெறிக்கவிட மஹிந்திரா ஆயத்தம்... 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை களமிறக்குகிறது!

மேலும், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக புதிய பிராண்டு பெயரை அறிமுகம் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மின்சார வாகனத் தயாரிப்புக்காக புதிய முதலீட்டாளர்களை அணுகுவதற்கும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இந்திய வாகன சந்தையை தெறிக்கவிட மஹிந்திரா ஆயத்தம்... 8 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை களமிறக்குகிறது!

மின்சார வாகன மார்க்கெட்டில் மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து வலுவான நிலையை எட்டுவதற்கு இந்த புதிய மின்சார எஸ்யூவி கார்கள் பெரிதும் முக்கியத்துவம் பெறும் என்று தெரிகிறது. மேலும், எதிர்காலத்தில் இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் மிக வலுவான போட்டியாளராகவும் மஹிந்திரா இருக்கும் என்று கருதலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Plans To Launch 8 New Electric SUVs in India by 2027.
Story first published: Wednesday, November 10, 2021, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X