மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

தொடர்ந்து அதிகரித்துவரும் உலோகங்களின் மதிப்பினால் பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த 2022ஆம் நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியை விலை அதிகரிப்புகளுடன் துவங்கி வருகின்றன.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

இந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் அதன் பெரும்பான்மையான கார்களின் விலைகளில் கொண்டுவந்துள்ள விலை அதிகரிப்புகளை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். மஹிந்திராவின் இந்த நடவடிக்கையின்படி, அதிகப்பட்ச விலை உயர்வை ஏற்றுள்ள வாகனம் என்றால் அது தார்.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

தாரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் வேரியண்ட்களை பொறுத்து ரூ.32,000-இல் இருந்து ரூ.92,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு விற்பனை செய்யப்படும் வாகனமாக தார் உள்ளது.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

எந்த அளவிற்கு என்றால், கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தாரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு கிட்டத்தட்ட 1 வருடம் வரையில் உள்ளது.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

இதனை சமாளிக்க கடுமையான முயற்சித்துவரும் மஹிந்திராவிற்கு கொரோனா வைரஸ் பரவலினால் அடிக்கடி அமல்படுத்தப்படும் ஊரடங்குகள் பெரிய தடையாக உள்ளன. தாருக்கு அடுத்து, அதிகப்படியான விலை உயர்வை பெற்ற மஹிந்திரா கார்களாக ஸ்கார்பியோ & மராஸ்ஸோ உள்ளன.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

இவற்றில் ஸ்கார்பியோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.27,211-இல் இருந்து ரூ.37,395 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. மராஸ்ஸோவின் விலைகள் வேரியண்ட்களை பொறுத்து ரூ.26,597-இல் இருந்து ரூ.30,867 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

இவற்றை போல் பொலிரோவின் விலைகளும் ரூ.22 ஆயிரம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் மஹிந்திரா சார்பில் விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்யூவி300-இன் விலைகள் ரூ.3,606-இல் இருந்து ரூ.24,029 வரையில் உயர்ந்துள்ளன.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

இவற்றை தவிர்த்து மற்ற கார்களின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் பெரிய அளவில் உயர்த்தவில்லை. மஹிந்திரா பிராண்டில் இருந்து சொகுசு காராக விற்பனை செய்யப்படும் அல்டுராஸின் விலை வெறும் ரூ.3,356 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.28.74 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கேயூவி100 கார் ரூ.2,670-இல் இருந்து ரூ.2,672 வரையில் விலை உயர்வை ஏற்றுள்ளது. விரைவில் புதிய தலைமுறை அப்டேட்டை பெறவுள்ள எக்ஸ்யூவி500 காரின் விலைகள் ரூ.3,062 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா தாரின் விலை ரூ.92,000 வரையில் அதிகரிப்பு!! ஸ்கார்பியோ, மராஸ்ஸோவின் விலைகளும் உயர்ந்தன

கடந்த 2021 ஜூன் மாதத்தில் மஹிந்திரா பயணிகள் வாகன பிரிவு 17 ஆயிரத்திற்கும் குறைவான கார்களையே விற்பனை செய்துள்ளது. 2020 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 50 சதவீதம் குறைவாக வெறும் 8 ஆயிரம் மஹிந்திரா கார்களே விற்கப்பட்டு இருந்தன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Price Increase July 2021 Up To Rs.92k. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X