வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

மஹிந்திரா நிறுவனம் 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பிற்கான காரணம் மற்றும் திரும்ப அழைத்தலின் அடிப்படையில் நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

மஹிந்திரா நிறுவனம் தான் குறிப்பிட்ட காலத்தில் தயாரித்த வாகனங்களில் பழுது ஏற்பட்டிருப்பதாக கூறி, அந்த பழுதுற்ற வாகனங்களைத் திருப்பி வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்த திரும்பி அழைத்தல் 29,878 வாகனங்களுக்கு பொருந்தும்.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

நாட்டின் ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் பிக்-அப் ரக வாகனங்களிலேயே பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது. ஃப்ளூட் பைப்புகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்யும் நோக்கிலேயே அனைத்து வாகனங்களையும் திரும்பி வருமாறு அழைத்திருக்கின்றது, மஹிந்திரா.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

2020 ஜனவரி மற்றும் 2021 பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் உருவாக்கப்பட்ட பிக்-அப் வாகனங்களிலேயே கோளாறு ஏற்பட்டிருக்கின்றது. அண்மயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வாயிலாகவே பிக்-அப் வேன்களின் ஃப்ளூட் பைப்புகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

இவற்றை கட்டணமில்லாமல் மாற்றி தர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆம், தங்கள் நிறுவனத்தினால் ஏற்பட்ட பிரச்னையை தாங்களே இலவசமாக மாற்ற தர இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச பழுது நீக்கம் பணியானது தற்போது அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் 29,878 பிக்-அப் வாகனங்களுக்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவை மனப்பான்மையில் அடிப்படையிலேயே நிறுவனம் தாமாக முன் வந்து பழுதுநீக்கம் பணியை மேற்கொள்ள தொடங்கியிருப்பது தெரிவித்திருக்கின்றது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

தனி தனியாக ஒவ்வொரு வாடிக்கையாளராக அழைக்கப்பட்டு அவர்களின் பிக்-அப் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சில முக்கிய பாதுகாப்பு வழிக் காட்டுதல்களைக் கடைபிடித்து, அதன்படி வாகனங்கள் பழுது நீக்கம் செய்யும் பணிக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

மஹிந்திரா நிறுவனம் இதுபோன்று வாகனங்களில் கோளாறு இருப்பதாகக் கூறி திரும்பி அழைக்கும் பணியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. முன்னதாக, கடந்த மாதம்தான் இதுமாதிரியான ஓர் செயலில் அது ஈடுபட்டது. தனது நாஷிக் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 600 வாகனங்கள் பழுதுற்றவை என்பதைக் கண்டறிந்து.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

அவற்றை மீண்டும் திரும்பி வருமாறு மஹிந்திரா அழைப்பு விடுத்தது. அப்போதும், கோளாறுகள் அனைத்தும் இலவசமாக சரி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. எஞ்ஜினின் முக்கிய பாகம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

இந்த பிரச்னையால் வாகனங்கள் அதிக மாசை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனையே உடனேக் கண்டறிந்து அவற்றை மஹிந்திரா நிறுவனம் சரி செய்யத் தொடங்கியது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது மற்றுமொரு அழைப்பை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

மஹிந்திரா நிறுவனம் மிக விரைவில் அதன் சின்னத்தை மாற்ற இருக்கின்றது. புதிய சின்னத்தை தனது புதுமுக காரான எக்ஸ்யூவி700 காரிலேயே முதல் முறையாக நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி காராகும். இந்த காரை ஆகஸ்டு 14ம் தேதி அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

ஆகையால், நிறுவனத்தின் புதிய சின்னம் மற்றும் புதிய காரின் அறிமுகம் என அனைத்துமே அன்றைய தினமே அரங்கேற இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கார் மாடலாக எக்ஸ்யூவி700 மாறியிருக்கின்றது. இந்த காரில் எக்கசக்க சிறப்பு அம்சங்களை நிறுவனம் வழங்க திட்டமிட்டிருக்கின்றது.

வாகனங்களில் பழுது... 30 ஆயிரம் பிக்-அப் வாகனங்களை திரும்பி அழைக்கும் மஹிந்திரா... என்ன பிரச்னை?

மிக துள்ளியமான பார்வை திறனை வழங்கக் கூடிய எல்இடி மின் விளக்குகள், ஸ்மார்ட் ஃப்யூரிஃபையர் வசதிக் கொண்ட காற்று வடிக்கட்டி, புதிய ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பபத்திலான ஹேண்டில்கள் என பன்முக சிறப்பு வசதிகள் இக்காரில் இடம் பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இக்காரை இந்தியர்கள் சிலர் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra recalls 30000 pik up to replace faulty fluid pipe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X