Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய பாதுகாப்பான கார்... இந்தியாவில் தூள் கிளப்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 சேல்ஸ்...
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரின் விற்பனை உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 20,498 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 19,555 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மஹிந்திரா நிறுவனம் கார் விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில் பொலிரோ முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் 7,233 ஆக இருந்த பொலிரோ கார்களின் விற்பனை எண்ணிக்கை, 2021ம் ஆண்டு ஜனவரியில் 7,567 ஆக உயர்ந்துள்ளது. இது 5 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை எக்ஸ்யூவி300 பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,360 ஆக இருந்த எக்ஸ்யூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை, 2021ம் ஆண்டு ஜனவரியில் 4,612 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 37 சதவீத வளர்ச்சியை எக்ஸ்யூவி300 பதிவு செய்துள்ளது.

தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதே, எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஸ்கார்பியோ பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 5,316 ஆக இருந்த ஸ்கார்பியோ எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜனவரியில் 4,083 ஆக குறைந்துள்ளது. இது 23 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் தார் எஸ்யூவி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரியில் 3,152 தார் எஸ்யூவிகளை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. ஆனால் செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தார் எஸ்யூவிக்கு மிகவும் நீண்ட காத்திருப்பு காலம் நிலவுவதற்கு இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் 5வது இடத்தை எக்ஸ்யூவி500 எஸ்யூவி பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் 1,455 ஆக இருந்த எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜனவரியில் 888 ஆக குறைந்துள்ளது. இது 39 சதவீத வீழ்ச்சியாகும்.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ எஸ்யூவிகளின் புதிய தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் செமிகண்டக்டர் சிப்களுக்கு நிலவும் உலகளாவிய பற்றாக்குறையால், இந்த 2 எஸ்யூவிகளின் அறிமுகமும் தள்ளி போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே இந்த பட்டியலில் 6வது இடத்தை மராஸ்ஸோ எம்பிவி பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் 1,267 ஆக மராஸ்ஸோ எம்பிவியின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜனவரியில் 175 ஆக குறைந்துள்ளது. இது 86 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 7வது இடத்தை கேயூவி என்எக்ஸ்டி பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 59 ஆக இருந்த கேயூவி என்எக்ஸ்டி காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜனவரியில் 11 ஆக குறைந்துள்ளது. இது 81 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 8வது மற்றும் கடைசி இடத்தை அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி பிடித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் 68 ஆக இருந்த இந்த பிரீமியம் எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜனவரியில் 10 ஆக குறைந்துள்ளது. இது 85 சதவீத வீழ்ச்சியாகும்.