புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக வலுவான நிலையை எட்டுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இதற்காக, தனது புதிய கார் மாடல்களுக்கு சூட்டுவதற்காக 4 புதிய பெயர்களை பதிவு செய்துள்ளது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பும், விற்பனையும் கணிசமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதனால், அனைத்து நிறுவனங்களுமே புதிய எஸ்யூவி கார்களை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து வரும் மஹிந்திரா மேலும் 4 புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

இதற்காக, XUV100, XUV400, XUV700 மற்றும் XUV900 ஆகிய 4 புதிய பெயர்களை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ரகம் மற்றும் விலை அடிப்படையில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து ரகங்களிலும் புத்தம் புதிய மாடல்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

இதில், கேயூவி100 எஸ்யூவி மாடலானது எக்ஸ்யூவி100 என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதேபோன்று, மஹிந்திராவின் விலை உயர்ந்த மாடலாக இருந்து வரும் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது எக்ஸ்யூவி900 என்ற பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

தற்போது மஹிந்திராவின் வெற்றிகரமான மாடலாக இருந்து வரும் எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது தலைமுறை மாற்றம் செய்யப்பட்டு எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு பிரிமீயம் அம்சங்களுடன் வரும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

அண்மையில் இந்த புதிய மாடலின் பெயர் வெளியிடப்பட்டது. இந்த கார் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைப்பிலும் முற்றிலும் வேறுபட்டு அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் வருகைக்கு பின்னர் எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பெயர் எக்ஸ்யூவி400. ஆம். இந்த மாடலானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கார்களுக்காக 4 பெயர்களை பதிவு செய்தது மஹிந்திரா.... சந்தையை அதகளப்படுத்த திட்டம்!

தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி300 எஸ்யூவியைவிட இந்த புதிய எக்ஸ்யூவி400 எஸ்யூவியானது பரிமாணத்தில் பெரிய மாடலாகவும், 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வரும். இந்த புதிய மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Most Read Articles

English summary
Mahindra has trademarked the XUV100, XUV400, XUV700, and XUV900, which hints at upcoming SUVs from Mahindra. Or, it could be Mahindra trying to change names of SUVs it currently produces. No other details are available at this point in time. The brand has produced some brilliant SUVs with the XUV moniker until now. Now we know there are more XUVs coming our way.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X