இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி செய்தியில் பார்ப்போம்.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

மஹிந்திரா கடந்த மாதத்தில் 8 சதவீத வளர்ச்சியை கார்கள் விற்பனையில் அடைந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 19,400 கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை தான் 2020 நவம்பரை காட்டிலும் 8% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 17,971 மஹிந்திரா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

அதேநேரம் மஹிந்திரா கார்களின் கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 2021 அக்டோபரை காட்டிலும் 3% குறைவாகும். ஏனென்றால் கடந்த அக்டோபரில் மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து 20,034 ஆக இருந்தது. 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 2021 நவம்பரில் மஹிந்திரா கார்களின் விற்பனை 8% அதிகரித்திருப்பதற்கு சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700 மிக முக்கிய காரணமாகும்.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

ஏனெனில் அந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் தார் மற்றும் அல்டுராஸ் கார்கள் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மற்றவைகளின் விற்பனை கவனிக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக பொலிரோ மாடலே தொடர்ந்துள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

கடந்த மாதத்தில் மொத்தம் 5,442 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், 2020 நவம்பரில் இதனை காட்டிலும் 10.12% அதிகமாக 6,055 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதேபோல், இரண்டாவது இடத்தில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனையும் கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் 10.16% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

2020 நவம்பரில் 4,458 எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த மாதத்தில் 4,005 எக்ஸ்யூவி300 கார்களே விற்கப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில், சந்தையில் பல வருடங்களாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ 3,370 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் (3,725 யூனிட்கள்) உடன் ஒப்பிடுகையில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை 9.53% சரிந்துள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

மஹிந்திரா நிறுவனம் வருகிற 2022ஆம் ஆண்டில் ஆஃப்-ரோடு தேர்ந்தெடுப்பான் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் ஸ்கார்பியோவை அப்டேட் செய்ய தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த ஆண்டில் இருந்து ஸ்கார்பியோ கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொடலாம். நான்காவது இடத்தை, புதிய லோகோ உடன் மாடர்ன் மஹிந்திரா காராக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 பிடித்துள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று-இருக்கை வரிசை எஸ்யூவி கார் கடந்த மாதத்தில் மொத்தம் 3,207 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை தார் கடந்த மாதத்தில் 3,181 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், தாரின் விற்பனை 2020 நவம்பரை காட்டிலும் 23.82% அதிகரித்துள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

ஏனெனில் அந்த மாதத்தில் 2,569 தார் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவை தான் அதிகளவில் விற்பனையாகும் பிரதான மஹிந்திரா கார்களாகும். இதற்கடுத்துள்ளவை 100 யூனிட்களுக்கும் குறைவாகவே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் 6வது இடத்தில் மராஸ்ஸோ 99 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

அறிமுகத்தின்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்ற மராஸ்ஸோ மாடலின் விற்பனை சமீப ஆண்டுகளாகவே பெரிய அளவில் குறைவாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரிலும் 226 மராஸ்ஸோ கார்களே விற்கப்பட்டு இருந்தன. மஹிந்திராவின் ஒரே ஒரு சொகுசு காராக விளங்கும் அல்டுராஸ் ஜி4 கடந்த மாதத்தில் 80 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தை பெற்றுள்ளது.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

ஆனால் 2020 நவம்பரில் 23 அல்டுராஸ் கார்களே சந்தையில் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த சொகுசு காரின் விற்பனை சுமார் 247.83% உயர்ந்துள்ளது. 2020 நவம்பரில் இதே 23 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த மஹிந்திராவின் மைக்ரோ-எஸ்யூவி மாடலான கேயூவி100 மாடலும், 892 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த, எக்ஸ்யூவி700-க்கு முந்தைய தலைமுறையான எக்ஸ்யூவி500 மாடலும் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

இப்போதும் விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ!! முற்றிலுமாக ஓரங்கப்பட்ட கேயூவி100

புதிய தலைமுறை ஸ்கார்பியோ மட்டுமின்றி, தார் ஆஃப்-ரோடு வாகனத்தின் 5-கதவு வெர்சனையும் மஹிந்திரா தயாரித்து வருகிறது. இதன் அறிமுகம் 2023இல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 3-கதவு தாரின் தற்போதைய என்ஜின் தேர்வுகளை அப்படியே பெற்று வந்தாலும், 5-கதவுகளுடன் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற வாகனமாக புதிய நீளமான தார் வடிவமைக்கப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra sales nov 2021 bolero and xuv300 at top
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X