இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

இந்திய இராணுவத்திற்கான மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று புல்லட்ப்ரூஃப் கண்ணாடிகளுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

இந்திய இராணுவத்திற்கு வழக்கமாக ஆட்டோமொபைல் வாகனங்களை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா அதன் இராணுவ வாகன வரிசையில் ஸ்கார்பியோவிற்கு புதிய வெர்சனை வழங்க திட்டமிட்டுள்ளது.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

550 டிஎக்ஸ்பி, பொலிரோ, ரக்‌ஷக் மற்றும் ஸ்கார்பியோ என்ற மஹிந்திரா வாகனங்கள் தற்சமயம் இராணுவத்துடன் இணைந்து நாட்டிற்காக சேவையாற்றி வருகின்றன. போர் நேரங்களில் மட்டுமின்றி சாதாரண அமைதியான சூழலிலும் இந்த மஹிந்திரா வாகனங்கள் இந்திய இராணுவத்திற்கு பயன் அளிக்கக்கூடியதாக உள்ளன.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளது, போர் நேரங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோவை பற்றி. மோட்டாராக்டேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் சோதனை வாகனத்தில் புல்லட் ஃப்ரூஃப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

செவ்வகம் வடிவில் புல்லட் ஃப்ரூஃப் கண்ணாடிகள் சிறிய அளவில் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் தலா இரு துண்டுகளாக பொருத்தப்பட்டுள்ளன. பின்பகுதியில் ஒரே துண்டாக பெரிய அளவில் புல்லட் ஃப்ரூஃப் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

இந்த சோதனை வாகனத்தின் புல்லட் ஃப்ரூஃப் திறன் கொண்ட கண்ணாடிகள் கிட்டத்தட்ட மஹிந்திரா ரக்‌ஷக் வாகனத்தில் வழங்கப்படுவதை போன்று இருக்கலாம். மஹிந்திரா ரக்‌ஷக் வாகனத்தின் பின்பகுதியில் கண்ணாடி, 10 மீட்டர் தூரத்தில் இருந்து சுடப்படப்படும் 7.62மிமீ புல்லட்களையும் தாங்கக்கூடியது.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

அதேநேரம் ரக்‌ஷக் கையெறி குண்டுகளையும் தாங்கக்கூடியது. இந்த மஹிந்திரா வாகனத்தில் வழங்கப்படும் புல்லட் ஃப்ரூஃப் ஆனது அதி-வலிமையான இரும்பு, கலப்பு இரும்பு மற்றும் அட்வான்ஸான அதிக செயல்திறன்மிக்க பாலிஎதிலீன் மற்றும் அராமிட் லேமினேட் உடன் தயாரிக்கப்படுகிறது.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

புதிய ஆர்மி எடிசன் ஸ்கார்பியோவும் இதேபோன்றதான புல்லட் ஃப்ரூஃபை தான் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சோதனை ஸ்கார்பியோவின் பின்பக்கத்தில் புல்லட் ஃப்ரூஃப் கண்ணாடியின் அருகில் சிறிய துளையை பார்க்கலாம்.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

இது வாகனத்தில் இருந்து எதிர் தாக்குதல் நடத்துவதற்காக ஆகும். வெளிப்பக்க தோற்றத்தை வைத்து பார்க்கும்போது புதிய ஆர்மி எடிசன் ஸ்கார்பியோ தற்போதைய ஸ்கார்பியோ மாடலில் இருந்து தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

சோதனைகளில் இருக்கும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவில் இந்த புதிய எடிசன் கொண்டுவரப்படவில்லை. இராணுவ பயன்பாட்டிற்கான வாகனம் என்பதால் வழக்கமான என்ஜின் சற்று அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும்.

இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!

இந்த சோதனை ஸ்கார்பியோவில் ‘ஆர்மி ட்ரைல்' ஸ்டிக்கர் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம். புதிய ஆர்மி எடிசன் ஸ்கார்பியோவில் தீயில் இருந்து பாதுகாப்பான பெட்ரோல் டேங்க் மற்றும் தட்டையான சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Scorpio For Indian Army Spied Testing With Bulletproof Windows.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X