ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எக்ஸ்யூவி700 (XUV700) காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே விரிவாக காணலாம், வாங்க.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra), அதன் புதுமுக கார் மாடலான எக்ஸ்யூவி700 (XUV700) காருக்கு அதிகாரப்பூர்வமாக புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருக்கின்றது.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக தற்போது எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இத்துடன், ஓர் பிரத்யேகமாக தொலைபேசி எண்ணையும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. 1800-267-9929 என்ற எண்ணின் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான எக்ஸ்யூவி700 காரை புக் செய்து கொள்ளலாம்.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

இது ஓர் கட்டணமில்லா அலைபேசி எண் ஆகும். அறிமுக விலையாக எக்ஸ்யூவி700 காருக்கு ரூ.11.99 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் விலை ஆகும். இதன் உயர்நிலை தேர்விற்கு ரூ. 21.69 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எக்ஸ் (MX) மற்றும் ஏஎக்ஸ் (AX) என இரு விதமான ட்ரிம்களிலும், ஒட்டுமொத்தமாக 28 தேர்விலும் எக்ஸ்யூவி 700 கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

இத்தகைய பன்முக தேர்வுக் கொண்ட காருக்கே மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்தியாவில் புக்கிங் பணியைத் தொடங்கியிருக்கின்றது. தேர்வில் மட்டுமில்லைங்க இந்த கார் சிறப்பு வசதிகளும் இந்தியர்களை மிரள வைக்கும் வகையில் உருவாகியிருக்கின்றது. ஆம், இந்த காரில் சொகுசு மற்றும் லக்சூரி கார்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையிலான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

முற்றிலும் வித்தியாசமான மற்றும் சிறப்பு திறனுடைய கைப்பிடி கொண்ட கதவுகள், அடாஸ் தொழில்நுட்பம், டேஷ்போர்டில் இரு திரை, அட்ரினோஎக்ஸ் இணைப்பு வசதி (செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது) என எக்கசக்க பிரம்மிக்க வைக்கும் அம்சங்கள் எக்ஸ்யூவி700 காரின் டாப் வேரியண்டில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

அண்மையிலேயே இந்த இணைப்பு வசதியைக் கன்ட்ரோல் செய்யக் கூடிய அட்ரினோஎக்ஸ் (AdrenoX) இணைப்பு செயலியை மஹிந்திரா நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியின் வாயிலாக 64 சிறப்பு வசதிகளைக் கன்ட்ரோல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

இதுமட்டுமின்றி, ட்யூவல்-ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், ஒயர்லெஸ் சார்ஜிங், மல்டி ஃபங்க்ஷன் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், 360 டிகிரி கேமிரா, எலெக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

அட்ரினோஎக்ஸ் கார் இணைப்பு வசதியை எக்ஸ்யூவி700 காரின் ஏஎக்ஸ் சீரிஸில் மட்டுமே பெற முடியும். குறிப்பாக, ஏஎக்ஸ் 3, ஏஎக்ஸ் 5 மற்றும் ஏஎக்ஸ் 7 ஆகிய தேர்வுகளில் மட்டுமே இவ்வசதியை நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

2.0 லிட்டர் எம்ஸ்டால்லியன் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 197 பிஎச்பியையும், டீசல் மோட்டார் 182 பிஎச்பி திறனையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றன.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டாடா ஹாரியர், சஃபாரி, எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போது இந்தியாவில் டாடா சஃபாரி காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதற்கு நல்ல போட்டியை எக்ஸ்யூவி700 வழங்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு போன் கால் பண்ணா போதும் உங்களுக்கான XUV700 காரை புக் செஞ்சிக்கலாம்... அழைப்புக்கு கட்டணம்கூட இல்ல!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 கார் பெட்ரோல், டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைச் செய்யப்போவதில்லை. விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் இக்காரை எலெக்ட்ரிக் மோட்டாருடன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது நிறுவனம் முன் மாதிரி மாடல் எக்ஸ்யூவி700 மின்சார காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மிக விரைவில் இந்த காரின் முக்கிய விபரத்தை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra starts booking for xuv700 from today
Story first published: Thursday, October 7, 2021, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X