விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

மஹிந்திரா தாருக்கான முன்பதிவுகள் இமாலய எண்ணிக்கையை தொட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தாரின் மூலமாக நல்ல இலாபத்த்கை பார்த்து வருகிறது. அதேநேரம் இந்த எஸ்யூவி வாகனத்திற்கு குவியும் முன்பதிவால் ஏற்படும் பாகங்கள் பற்றாகுறையையும் சாமர்த்தியாக கையாண்டு வருகிறது.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

ஏஎக்ஸ், ஏஎக்ஸ்(ஒ) மற்றும் எல்எக்ஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தாரின் ஏஎக்ஸ் வெர்சனில் மட்டும் பின்பக்கத்தில் இரு இருக்கைகள் ஒன்றை ஒன்று பார்த்து கொள்ளும்படி வழங்கப்படுகின்றன.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

மற்ற இரு வேரியண்ட்களிலும் என்ஜின், ட்ரான்ஸ்மிஷன் மற்றும் மேற்கூரை உள்ளிட்டவை வெவ்வேறான தேர்வுகளில் கொடுக்கப்படுகின்றன. சரி விஷயத்திற்கு வருவோம், கடந்த 2021 ஜனவரி மாதத்தில் தாரின் முன்பதிவில் ஆயிரத்தை கடந்துள்ளதாக மஹிந்திரா அறிவித்திருந்தது.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

இந்த நிலையில் தற்போது இந்த முன்பதிவுகளில் 39,000 என்ற இமாலய எண்ணிக்கையை இந்த நிறுவனம் கடந்துள்ளது. 2020 மஹிந்திரா தாருக்கு முன்பதிவுகள் விஸ்வரூபத்தில் நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு நாளிலும் 200-250 முன்பதிவுகளை இந்த வாகனத்தின் மீது மஹிந்திரா ஏற்று கொள்கிறது.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

இவ்வாறு முன்பதிவுகள் குவிவதால் தாரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய மாதங்கள் சில நகரங்களில் சுமார் 10 மாதங்களாக உள்ளது. கடந்த 2021 ஜனவரியில் 3,100 யூனிட் தார்கள் டெலிவிரிக்காக டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

ஒரு மாதத்தில் இவ்வளவு அதிகமான மஹிந்திரா தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். தேவை அதிகரிப்பதால் தாரின் தயாரிப்பு பணிகளை கடந்த ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் அதிகரித்திருந்தது.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

இதனால் காத்திருப்பு காலம் வரும் வாரங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் மாற்றக்கூடிய ஹார்ட்-டாப் என புதிய மேற்கூரை தேர்வையும் இந்த வாகனத்திற்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விஸ்வரூபத்தில் அதிகரிக்கும் 2020 தாருக்கான முன்பதிவுகள்!! பாகங்கள் பற்றாகுறையால் தவிக்கும் மஹிந்திரா

தற்போதைக்கு மாற்ற முடியாத சாஃப்ட்-டாப், மாற்றக்கூடிய சாஃப்ட்-டாப் மற்றும் மாற்ற முடியாத ஹார்ட்-டாப் என்ற 3 விதமான மேற்கூரை தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் புதிய மில்கி வெள்ளை நிற தேர்வும் விரைவில் 2020 தாருக்கு வழங்கப்படவுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Thar booking crosses 39,000 units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X