அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

மஹிந்திராவின் சமீபத்திய வெற்றிக்கரமான மாடல்களுள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புதிய தலைமுறை தாரின் பெயரை சொல்லலாம். இருப்பினும் தாரை வாங்கிய சில உரிமையாளர்களுக்கு அதன் மைலேஜ் சற்று கவலையை ஏற்படுத்தலாம். ஏனெனில் கூடுதல் ஆற்றலிற்காக புதிய தலைமுறை தாரில் டர்போ பெட்ரோல் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

இந்தியாவில் பெட்ரோல் & டீசலின் விலையினை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். இருப்பினும் தாரில் சிஎன்ஜி தேர்வை கொண்டுவர எந்த உரிமையாளராவது விரும்புவார்களா என கேட்டால், இங்கே ஒருவர் மஹிந்திரா தார் வாகனத்திற்கு சிஎன்ஜி தொகுப்புகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த சிஎன்ஜி மாற்றத்தினை டீலர் ஒருவர் இந்த தாரில் கொண்டுவந்துள்ளார். வழங்கியுள்ளார் என சொல்வதை காட்டிலும் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தி பரிசோதித்து பார்த்துள்ளனர் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இவர் ஷோரூமில் இந்த தார் வாகனத்தை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ ஆரம்பமாகிறது.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

வீடியோவில், மஹிந்திரா தாரில் 12 கிலோவில் இருந்து 14 கிலோ வரையிலான எடை கொண்ட சிலிண்டர்களை பின்பக்க பூட் பகுதியில் பொருத்த முடியும் என இந்த டீலர் தெரிவித்துள்ளார். அதன்பின் பொனெட்-ஐ திறந்து என்ஜின் அமைப்பை காட்டுகிறார். இதில் சவால் என்னவென்றால், தாரில் மஹிந்திரா நிறுவனம் பொருத்துவது டைரக்ட் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் என்ஜின்.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

இதற்கு பிரத்யேகமான சிஎன்ஜி தொகுப்பு தேவை என இவர் கூறுகிறார். அதாவது இந்த சிஎன்ஜி தொகுப்பானது டைரக்ட்-இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் என்ஜின்களை ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் விளக்கி கூறிய பின்னர் வாகனம் சிஎன்ஜி தொகுப்புடன் ஓர் டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கப்படுகிறது. எந்த பிரச்சனையுமின்றி தார் ஓடுவது போல தான் இந்த வீடியோவில் காட்டியுள்ளனர்.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

சிஎன்ஜி தொகுப்புடன் இயக்கினால் மஹிந்திரா தார் லிட்டருக்கு 20கிமீ மைலேஜை தரும் என இந்த டீலர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இவரது கூற்றின்படி பார்த்தோமேயானால், தார் சிஎன்ஜி வாகனம் வெறும் ரூ.3 - ரூ.3.15 எரிபொருள் செலவில் ஒரு கிமீ தூரத்திற்கு இயங்கும். வீடியோவில் தொடர்ந்து பேசிய இந்த டீலர், சிஎன்ஜி தொகுப்பை சமீபத்தில் மஹிந்திரா பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 காரிலும் பொருத்தி பார்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

மஹிந்திரா தாரை பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் சந்தையில் விற்பனை செய்துகிறது. இதில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டார்க் திறன், டிரான்ஸ்மிஷன் தேர்வை பொறுத்து மாறுப்படுகிறது. அதாவது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 300 என்எம் வரையிலும், 6-ஸ்ப்டு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 320 என்எம் டார்க் திறன் வரையிலும் வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

2.2 லிட்டர் டீசல் என்ஜின் 130 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையில் தாருக்கு வழங்கக்கூடியது. இதன் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின்களுடனும் 4x4 ட்ரைவ்ட்ரெயின் மற்றும் குறை-விகித கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

தற்போதைக்கு இந்திய சந்தையில் 3-கதவுகளுடன் விற்பனை செய்யப்படும் ஒரே எஸ்யூவி வாகனமாக மஹிந்திரா தார் விளங்குகிறது. இந்த ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.78 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.15.08 லட்சம் வரையில் உள்ளன. இதற்கிடையில் தற்சமயம் மஹிந்திரா நிறுவனம் ஐந்து-இருக்கை தாரின் தயாரிப்பு பணிகளிலும் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

5-இருக்கை தாரும் வழக்கமான பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் தான் கொண்டுவரப்படும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கூடுதல் இருக்கை வரிசையினால் வாகனத்தின் வீல்பேஸ் அளவை அதிகமாக எதிர்பார்க்கலாம். பின் இருக்கை வரிசைக்கான கதவுகள் வடிவமைப்பில் மஹிந்திரா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும்.

அடேங்கப்பா... சிஎன்ஜி தொகுப்பு உடன் மஹிந்திரா தார் வாகனமா!! நிகழ்த்தி காட்டியுள்ள டீலர் - வீடியோ!

ஏனெனில் வயதானவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து செல்ல நேர்ந்தால் அசவுகரியம் என்ற வார்த்தைக்கே இடமளிக்கக்கூடாது அல்லவா. கூடுதல் எடையை சுமக்க வேண்டி இருக்கும் என்பதால் சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்படும். அதேபோல் நகரங்களில் அதிகளவில் வாங்கப்படும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ள 5-இருக்கை தாரில் ஸ்டேரிங் சக்கரம் இலகுவானதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra Thar Turbo Petrol ready to run on CNG Aftermarket parts dealer
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X