பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வந்த Force Gurkha எஸ்யூவி கார் இந்தியாவில் Mahindra Thar காருக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது. இக்காரின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha SUV) எஸ்யூவி கார் இந்திய சந்தையில் இன்று (செப்டம்பர் 27) முதல் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்6 தர ஃபோர்ஸ் கூர்கா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இக்காரை முதல் முறையாக நிறுவனம் வெளியீடு செய்திருந்தது. இந்நிலையில் இன்று விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

இந்த கார் இந்தியாவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவிக்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கின்றது. தார் எஸ்யூவி-யை புக் செய்தால் அதிகபட்சம் ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டும் என்கிற அளவிற்கு காத்திருப்பு காலம் நிலவி வருகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

இத்தகைய ஓர் காருக்கே போட்டியாக இந்தியாவில் ஃபோர்ஸ் கூர்கா விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போது தார் எஸ்யூவிக்கு கிடைத்து வருவதைப் போன்ற அமோகமான வரவேற்பு கூர்காவிற்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இக்காருக்கு அறிமுக விலையாக ரூ. 13.59 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

தற்போது, ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் 2021 ஃபோர்ஸ் கூர்காவிற்கு புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, வரும் 15ம் தேதி முதல் ஃபோர்ஸ் கூர்காவை நிறுவனம் டெலிவரி கொடுக்க இருக்கின்றது. தசேரா பண்டிகையை அலங்கரிக்கும் விதமாக அன்றைய தினத்தில் இருந்து டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

2021 ஃபோர்ஸ் கூர்கா 4X4 பற்றிய முக்கிய விபரங்கள்

இது இரண்டாம் தலைமுறை கூர்கா ஆகும். அப்டேட் செய்யப்பட்ட டிசைன் மற்றும் அதிக சிறப்பம்சங்களை வெர்ஷனாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. பிரீமியம் அம்சங்களும் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக, அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் அதிக அகலமான மற்றும் நீளமான உடல்வாகுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

இக்காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக சி-இன்-சி சேஸிஸ் மற்றும் புதிய காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்கள் இருக்கின்றன. இந்த சஸ்பென்ஷன் 4 அலாய்களுக்கும் மிக சிறந்த பேலன்ஸை வழங்க உதவும். இத்துடன், அதிக கரடு மேடான பாதைகளைக் கூட அசால்டாக சமாளிக்க இவை உதவும். தார் சாலை, மணல் பரப்பு மற்றும் அதிக நீர் நிறைந்த சாலை என அனைத்தையும் இது சமாளிக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

ஃபோர்ஸ் கூர்கா 4116 மிமீ நீளம், 1812 மிமீ அகலம்ம மற்றும் 2075 மிமீ உயரத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் வீல்பேஸ் 2400 மிமீ இருக்கின்றது. இக்காரை ஐந்து விதமான நிறத் தேர்வுகளில் ஃபோர்ஸ் நிறுவனம் வழங்க இருக்கின்றது. அந்தவகையில், சிவப்பு (Red), பச்சை (Green), வெள்ளை (White), ஆரஞ்சு (Orange) மற்றும் சாம்பல் (Grey) ஆகிய நிற தேர்வுகளிலேயே 2021 கூர்கா விற்பனைக்குக் கிடைக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

இத்துடன், புதுப்பிக்கப்பட்ட வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், மறு வடிவமைக்கப்பட்ட முகப்பு க்ரில், எல்இடி ஸ்டாப் விளக்குடன் செங்குத்தாக நிலை நிறுத்தப்பட்ட டெயில் மின் விளக்குகள் ஆகியவையும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

தொடர்ந்து, அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் பொருட்டு கருப்பு நிற ஓஆர்விஎம்கள், கருப்பு நிற ரூஃப் ரெயில்கள் மற்றும் ரேக் ஆகியவை இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் புதிய 'எஃப்' (F)எனும் எம்பளம் மற்றும் பாக்ஸ் வடிவிலான தோற்றம் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

உட்பகுதி

ஃபோர்ஸ் கூர்காவின் உட்பகுதி முழுவதும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதன் கேப்டைன் இருக்கை ஆர்ம் ரெஸ்ட் மற்றும் அதிக மிருதுவான வசதியைக் கொண்டிருக்கின்றது. மேலும், பவர் விண்டோ, கப் ஹோல்டர், 7 இன்சிலான தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன்), நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் மோல்டட் ஃப்ளூர் மேட் ஆகியவையும் இடம் பெற்றிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

இந்த வாகனத்தில் பாதுகாப்பு வசதிக்காக டிரைவர் மற்றும் கோ-பாசஞ்ஜருக்கான ஏர்பேக், ஐசோஃபிக்ஸ் இருக்கை மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சென்ட்ரல் லாக்கிங் அம்சம், ஸ்பீடு சென்சிங் டூர் லாக், ரியர் பார்க்கிங் சென்சார், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் லீட் மீ எனும் சிறப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Force Gurkha விற்பனைக்கு அறிமுகம்... Mahindra Thar காரின் நிலைமை என்ன ஆக போகுதோ!!

எஞ்ஜின்

2021 ஃபோர்ஸ் கூர்கா 2.6 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். 115 எச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். 35 டிகிரி கோணத்தில் உள்ள சாலையைக் கூட இந்த கார் மிக அசால்டாக கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 700 மிமீ ஆழமான நீர் நிறைந்த சாலையிலும் இக்காரால் பயணிக்க முடியும். 5 ஸ்பீடு மெர்சிடிஸ் ஜி-28 டிரான்ஸ்மிஷன் இதன் எஞ்ஜினில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Mahindra thar rival 2021 force gurkha launched in india at price rs 13 6 lakh
Story first published: Monday, September 27, 2021, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X