ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

மஹிந்திரா ஸ்கார்பியோ, எஸ்3+ என்ற பெயரில் விலை குறைவான வேரியண்ட்டை பெறவுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்னமும் மஹிந்திராவின் தயாரிப்பாக ஸ்கார்பியோ சிங்கம்போல் கர்ஜித்து கொண்டிருக்கிறது.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் என தற்போதைய மாடர்ன் கார்களை விற்பனையில் எதிர் கொண்டுவரும் ஸ்கார்பியோவின் விற்பனையை மேலும் அதிகரிக்க மஹிந்திரா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

இந்த வகையில் ஸ்கார்பியோவிற்கு புதிய விலை குறைவான வேரியண்டை எஸ்3+ என்ற பெயரில் வழங்க இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்சமயம் ஸ்கார்பியோ எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

இதில் தற்போதைய விலை குறைவான வேரியண்ட்டான எஸ்5-இல் வழங்கப்படும் செண்ட்ரல் லாக்கிங், தன்னிச்சையான கதவு பூட்டு, பக்கவாட்டு மற்றும் பின்பக்க படிகட்டுகள், உட்புற கேபினில் பாட்டில் வைப்பதற்கான ஹோல்டர், மையத்தில் விளக்கு, பின்பக்க டெமிஸ்டர் மற்றும் ஒரு-தொடு பாதை இண்டிகேட்டர் உள்ளிட்டவை புதிய எஸ்3+ வழங்கப்படாது என தகவல்கள் கூறுகின்றன.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

இவை தவிர்த்த எஸ்5 வேரியண்ட்டில் வழங்கப்படும் எந்த வசதியிலும் இந்த புதிய விலை குறைவான வேரியண்ட் குறையுடன் இருக்காது. எஸ்3+ வேரியண்ட் 7,8 மற்றும் 9 என மூன்று விதமான இருக்கை அமைப்பு தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

இதில் 8 மற்றும் 9 இருக்கை அமைப்பு தேர்வுகளில் பின் இருக்கை வரிசைகள் ஒன்றையொன்று எதிரெதிர் பார்க்கும் விதத்தில் வழங்கப்படும். ஸ்கார்பியோவின் இந்த புதிய வேரியண்ட்டில் அதே 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் தான் வழங்கப்படவுள்ளது.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

ஆனால் என்ஜின் 20 பிஎஸ் மற்றும் 40 என்எம் டார்க் திறன் குறைவாக 120 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பதால் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படும்.

ரூ.12 லட்சத்திற்குள் ஸ்கார்பியோவை கொண்டுவரும் மஹிந்திரா!! ஆனா இந்த வசதிகள் எல்லாம் இருக்காது!

தற்சமயம் மஹிந்திரா ஸ்கார்பியோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.12.68 லட்சத்தில் இருந்து ரூ.16.53 லட்சம் வரையில் உள்ளன. நமக்கு தெரிந்தவரையில் புதிய எஸ்3+ வேரியண்ட்டின் விலை ரூ.12 லட்சத்திற்கு உள்ளாக நிர்ணயிக்கப்படும். இந்த புதிய வேரியண்ட்டை தொடர்ந்து புதிய தலைமுறை ஸ்கார்பியோவும் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Scorpio To Get More Affordable With A New Base-Spec S3+ Variant
Story first published: Friday, February 12, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X