எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

மஹிந்திரா நிறுவனம் தனது எதிர்கால காருக்காக எக்ஸ்யூவி900 என்ற பெயரை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

மஹிந்திரா & மஹிந்திரா சில தினங்களுக்கு முன்பு டபிள்யூ601 மாடல், எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

தற்போதைய எக்ஸ்யூவி500-இன் விற்பனைக்கு மாற்றாக கொண்டுவரப்படும் எக்ஸ்யூவி700 மாடலும் எஸ்யூவி வாகனமாகும். எக்ஸ்யூவி500 பெயர் மஹிந்திராவின் புதிய 5-இருக்கை எஸ்யூவி வாகனத்திற்கு பெயருக்கு ஏற்றாற்போல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

அதாவது புதிய எக்ஸ்யூவி700-இன் 5-இருக்கை வெர்சனாக எக்ஸ்யூவி500 தயாரிக்கப்பட உள்ளது. இவற்றுடன் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக எக்ஸ்யூவி400 என்ற பெயரில் நடுத்தர-அளவு எஸ்யூவி வாகனமும் அறிமுகப்படுத்தப்படலாம்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

இதுவும் புதிய எக்ஸ்யூவி700 காரையே பெரிதும் தோற்றத்தில் ஒத்து காணப்படலாம். இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி900 என்ற பெயரையும் இந்த மாத துவக்கத்தில் பதிவு செய்துள்ளது. நமக்கு தெரிந்த வரையில் இந்த பெயர் முழு-அளவு எஸ்யூவி வாகனத்திற்கு பயன்படுத்தப்படலாம்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

அதாவது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவியர், எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள இசுஸு எம்யு-எக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி900 போட்டியாக கொண்டுவரப்படலாம்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

அதேநேரம் எக்ஸ்யூவி900 மஹிந்திராவின் தற்போதைய அல்டுராஸ் ஜி4 காருக்கு மாற்றாக, அதன் ரீபேட்ஜ்டு வெர்சனாகவும் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விதமான இருக்கை தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள எக்ஸ்யூவி700-இல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. மேலும் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் தேர்வாக கொடுக்கப்படலாம்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

ஆனால் எக்ஸ்யூவி900-ஐ பொறுத்தவரையில் இந்த காரின் பெயரையே மஹிந்திரா இப்போதுதான் பதிவு செய்துள்ளதால், இந்த முழு-அளவு எஸ்யூவி காரை பற்றி ஆராய்வது இப்போதைக்கு சரியாக இருக்காது. எக்ஸ்யூவி700-இல் வழங்கப்படும் என்ஜின் தேர்வுகளுடன் அதிக டார்க் திறனை வழங்கக்கூடிய டர்போ டீசல் என்ஜினும் தேர்வாக வழங்கப்படலாம்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

அல்டுராஸ் ஜி4 காரை போன்று எக்ஸ்யூவி900 காரும் மஹிந்திராவின் விலையுயர்ந்த வாகனமாக விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேநேரம் இந்த புதிய முழு-அளவு எஸ்யூவி வாகனத்திற்கு ஆஃப்-ரோடு திறன்களையும் மஹிந்திரா வழங்கும்.

எக்ஸ்யூவி700 மட்டுமல்ல, எக்ஸ்யூவி900 பெயரிலும் தயாராகும் புதிய மஹிந்திரா எஸ்யூவி! ஃபார்ச்சூனருக்கு போட்டியாக..

தற்போதைய எக்ஸ்யூவி500-ஐ காட்டிலும் கூடுதலாக நிமிர்ந்த தோற்றத்துடன் உருவாக்கப்படவுள்ள எக்ஸ்யூவி700-இன் உட்புறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என வழங்கப்படவுள்ள இரு திரைகளை நிச்சயம் எக்ஸ்யூவி900-லிலும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV900 Name Trademarked, New Fortuner Rival Coming? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X