Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வருகிறது புதிய மஹிந்திரா கார்! இந்த காரை எப்போது எதிர்பார்க்கலாம்? சுவாரஷ்ய தகவல்கள்
டபிள்யூ601 என்ற குறிப்பெயரில் அறியப்பட்டு வந்த எஸ்யூவி ரக காருக்கு மஹிந்திரா நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இத்துடன் இக்காரை எப்போது எதிர்பார்க்கலாம் (அறிமுகம் எப்போது) என்பதுகுறித்த தகவலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் நாம் காண இருக்கின்றோம்.

மஹிந்திரா நிறுவனம் புதிய கட்டுமான தளத்தைக் கொண்டு புதுமுக கார் ஒன்றை உருவாக்கி வருவதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. டபிள்யூ601 (W601) என்ற குறி பெயரில் இக்கார் கடந்த காலங்களில் அறியப்பட்டு வந்தது. இந்த நிலையில், இக்குறிப் பெயரை நீக்கி எக்ஸ்யூவி 700 என்ற பெயரை நிறுவனம் வைத்துள்ளது.

இதனை எக்ஸ்யூவி 7 டபுள் 'ஓ' (XUV, 7 double ‘Oh') என்றே அழைக்க வேண்டும். இப்புதிய பெயிரிலேயே மஹிந்திராவின் புதுமுக கார் உலகளாவிய அளவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்காருக்கான வீடியோ ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின்படி, "மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் 2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரும்" என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கூறியதைப் போல் இக்கார் புதிய கட்டுமான தளத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், மஹிந்திரா நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே, அதிக பாதுகாப்பு மற்றும் உறுதியான உடல் என பல்வேறு சிறப்பு வசதிகள் நிறைந்த காராகவே இது விற்பனைக்கு வரும் என நிறுவனம் கூறியுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் சில கார்கள் அதிக பாதுகாப்பு திறன்களுக்கு பெயர்போனவையாக இருக்கின்றன. இதற்கு எந்தவொரு விதிவிலக்கும் இன்றி எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காரும் வரும் என்பதையே நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகையால், எக்ஸ்யூவி700 காரில் பாதுகாப்பு திறன்குறித்து எந்த சந்தேகமும் பட தேவையில்லை.

இதுமட்டுமின்றி சொகுசு, சிறந்த திறன் வெளிப்பாடு மற்றும் தொழில்நுட்ப வசதியில் முதல் வகுப்பு என அனைத்திலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இக்கார் வரும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இத்துடன், தானியங்கி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட இருக்கின்றது.

இளம் தலைமுறையினரை மனத்தில் கொண்டு இக்காரை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆகையால், இன்னும் ஏராளமான சிறப்பு வசதிகள் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் இக்காரை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தனது சக்கன் வாகன உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்க இருக்கின்றது.