பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு! அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா? நம்பவே முடியல!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ரக கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இந்தியாவில் மிகப்பெரிய டிமாண்டைப் பெற்று வரும் கார்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி மாடலும் ஒன்று. இந்த காருக்கு தற்போது நாட்டில் ஒரு வருடம் வரை காத்திருப்பு காலம் நிலவுகின்றது. ஆகையால், இப்போது புக் செய்தால் ஒரு வருடம் அல்லது அதற்கு இணையான காலம் வரை காத்திருந்து பெற வேண்டும் என்ற நிலை நாட்டில் நிலவுகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இத்தகைய அமோக வரவேற்பை அடுத்து இன்னும் சில புதுமுக மாடல்களின் வாயிலாக இந்தியாவை அலங்கரிக்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதனடிப்படையில், இன்று (ஆகஸ்டு 14) ஓர் புதுமுக காரை இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகம் செய்திருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

ஆம், நம் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எக்ஸ்யூ 700 காரையே மஹிந்திரா நிறுவனம் தற்போது நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனம் புதிய எக்ஸ்யூவி700 காரை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கியிருக்கின்றது. மிக முக்கியமாக இப்புதிய காரை தனது புதிய சின்னத்தில் வெளியீடு செய்திருக்கின்றது, மஹிந்திரா.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

ஆம், மஹிந்திரா நிறுவனம் தனது பழைய சின்னத்தை மாற்றியிருக்கின்றது. 'முட்டை வடிவ' வளையத்திற்குள் 'எம்' (M) எனும் ஆங்கில எழுத்து இருக்கும் சின்னத்தையே நிறுவனம் பயன்படுத்தி வந்தது. இந்த சின்னத்தையே தற்போது மஹிந்திரா மாற்றியிருக்கின்றது. புதிதாக அதே 'எம்' வடிவமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை பட்டாம்பூச்சி சிறகை விரித்து பறப்பது போன்ற உருவம் கொண்ட சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இந்த சின்னத்தையே தனது எதிர்கால தயாரிப்புகளில் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதற்கேற்ப விற்பனையாளர்களை ஷோரூம்களை மாற்றியமைக்கவும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்புதிய சின்னம் மஹிந்திரா கார்களுக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்தகைய ஓர் புதிய லோகோவே தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் எக்ஸ்யூவி700 காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

ஆகையால், இந்த சின்னத்தில் விற்பனைக்கு வரும் முதல் கார் என்ற புகழை எக்ஸ்யூவி700 பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல ஏராளமான சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் இந்த காரை தனது டபிள்யூ601 (W601) பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கியிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

நவீன கால கார்களை உருவாக்குவதற்காகவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக தளம் இதுவாகும். ஆகையால், கவர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு சற்றும் குறைவில்லா காராக எக்ஸ்யூவி700 காட்சியளிக்கின்றது. காரின் முகப்பு பகுதியில் ஆங்கில எழுத்து 'சி' வடிவ பகல்நேர எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இதுமட்டுமின்றி எக்கசக்க புதிய தொழில்நுட்ப வசதிகளையும் எக்ஸ்யூவி700 காரில் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. 99 சதவீதம் பாக்டீரியாக்களையும், 95 சதவீதம் வைரஸ்களையும் அழிக்கும் காற்று வடிகட்டி, மிகவும் ஸ்டைலிஷான எல்இடி மின் விளக்கு, ஓட்டுநர் தூங்குவதைக் கண்டறியும் வசதி (ஒரு வேலை ஓட்டுநர் தூங்கினால் எச்சரிக்கைகள் வாயிலாக இந்த தொழில்நுட்பம் சமிக்ஞை வழங்கும்), ஸ்கை ரூஃப் எனப்படும் பனோரமிக் சன்ரூஃப், முற்றிலும் மாறுபட்ட வசதிக் கொண்ட கைப் பிடிகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இதில் பல அம்சங்கள் எக்ஸ்யூவி 700 காரிலேயே முதல் முறையாக மஹிந்திரா அறிமுகம் செய்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி 360 டிகிரி சுழுலும் பார்வை திறன் கொண்ட கேமிரா, 13 சேனல்கள் கொண்ட டிஎஸ்பி ஆம்பிளிஃபையர் வசதிக் கொண்ட பிரீமியம் தர சவுண்ட் சிஸ்டம், சோனியின் சப்-ஊஃபர் மற்றும் 360 ஸ்பேடியல் சவுண்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் இப்புதிய காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இந்த ஒட்டுமொத்த சவுண்ட் சிஸ்டத்தின் திறன் வெளிப்பாடு 445வாட்டுகள் ஆகும். மேலும், இ-சிம் அடிப்படையிலான இணைப்பு தொழில்நுட்பம், குரல் கட்டளை, ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி, முன் இருக்கைகளை மடக்கும் வசதி, இரண்டு 10.25 இன்சிலான திரைகள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மற்றொன்று தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்), இரு நிலைகள் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பிரீமியம் தர அம்சங்களும் எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இவற்றுடன் கூடுதல் சிறப்பு வசதிகளாக ஒரே பாதையில் தொடர்ந்த பயணிக்க உதவும் தொழில்நுட்பம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸின்போது வாகனங்களின் வருகை குறித்து எச்சரிக்கும் கருவி, அவசர கால தானியங்கி பிரேக்கிங் வசதி, தானாக மின் விளக்கினை பூஸ்ட் செய்யும் சிறப்பு வசதி மற்றும் பார்க்க முடியாத ப்ளைண்ட் ஸ்பாட்களை கண்கானிக்க உதவும் தொழில்நுட்பம் போன்ற மிக மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

இதுமட்டுமின்றி 7 ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் லாக்கிங் வசதி, டிராக்சன் கன்ட்ரோல் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் புதிய எக்ஸ்யூவி700 காரில் இடம் பெற்றிருக்கின்றன. இப்புதிய காரை ஒட்டுமொத்த இரு விதமான வேரியண்டுகளிலும், 4 விதமான ட்ரிம்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

மேலும், டீசல் மற்றும் பெட்ரோல் என இருவிதமான எஞ்ஜின்களிலும் இது கிடைக்கும். இத்துடன் கூடுதல் தேர்வாக அனைத்து வீல்களும் இயக்கம் கொண்ட தேர்வையும் மஹிந்திரா வழங்க இருக்கின்றது.

வேரியண்டுகளின் விபரம்:

  • எம்எக்ஸ்
  • அட்ரினோ ஏஎக்ஸ்: ஏஎக்ஸ்3, ஏஎக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ்7
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

    ஸ்டைல் விபரம்:

    மஹிந்திரா நிறுவனம் புதிய எக்ஸ்யூவி 700 காரை அதன் எக்ஸ்யூவி500 காரின் பெரிய உருவம் கொண்ட காராக உருவாக்கியிருக்கின்றது. இருப்பினும், இந்த காரில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், இதன் முகப்பு பகுதி க்ரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மேற்கூரை பகுதி சற்று சாய்வான அமைப்பைக் கொண்டிருக்கின்றது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

    இத்துடன் காரின் முனை பகுதிகளில் வெள்ளி நிறத்திலான ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, இரு நிறத்திலான பல ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல், புதிய தனியாக பிரிக்கப்பட்ட வால் பகுதி மின் விளக்குகள், பூமராங் வடிவிலான பின் பக்க ஃபெண்டர் என பல புதிய உருவம் கொண்ட அணிகலன்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

    எஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:

    எக்ஸ்யூவி 700 மேலே கூறியதைப் போல் பன்முக எஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 198 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது 6ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

    2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 183 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜினும் 6ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இத்துடன், ஜிப், ஜேப், ஜூம் மற்றும் கஸ்டம் போன்ற ட்ரைவிங் மோட்களும் இக்காரில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

    இந்த காரின் வெளியீடு மட்டுமே தற்போது செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விற்பனைக்கான அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் கார்குறித்த இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கார் டாடாவின் சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெளியீடு... அடேங்கப்பா இவ்ளோ சிறப்பு வசதிகளா! சொகுசு காரே தோத்திடும் போலிருக்கே!

    மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை விபரம்:

    Mahindra XUV700 Price
    MX Petrol ₹11.99 Lakh
    MX Diesel ₹12.49 Lakh
    AX3 Petrol ₹13.99 Lakh
    AX5 Petrol ₹14.99 Lakh
Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra unveiled xuv700 suv car ahead of india launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X